தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

ஜாம்ஷெட்பூர் கால்பந்து கிளப்பை வெறும் 100 ரூபாய்க்கு விற்பனை செய்த டாடா ஸ்டீல்ஸ்

ஜாம்ஷெட்பூரில் 1987-ம் ஆண்டு கால்பந்து அகாடமியை டாடா தொடங்கியது. இந்த நிறுவனம் 300-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் ஐ.எஸ்.எல். என்ற கால்பந்து லீக்கில் விளையாடும் அணிகளில் ஒன்றாக ஜாம்ஷெட்பூர் கால்பந்து கிளப் உள்ளது. இந்த அணியின் உரிமையாளராக டாடா ஸ்டீல் இருந்து வந்தது.

இந்த நிலையில் டாடா ஸ்டீல் ஜாம்ஷெட்பூர் கால்பந்து கிளப்பின் மொத்த பங்குகளையும் சர்ச்சில் பிரதமர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் (Churchill Brothers Sports club) என்ற கிளப்பிற்கு விற்பனை செய்துள்ளது. ஒவ்வொரு கிளப்பும் கோடிக்கணக்கான ரூபாள் அளவில் கைமாறும். ஆனால், டாடா இந்த கிளப்பை வெறும் 100 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் டாடா ஸ்டீல்ஸ் இந்தியன் சூப்பர் லீக் (ISL) கிளப் உரிமையாளர்கள் என்பதில் இருந்து வெளியேறுகிறது.

ஜெம்ஷெட்பூர் கால்பந்து மற்றும் ஸ்போர்ட்டிங் பிரைவேட் லிமிடெட் (JFSPL) கால்பந்து அணியின் 100 சதவீதம் பங்குகளை மாற்ற டாடா ஸ்டீல் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. டாடா ஸ்டீல் அந்த கிளப்பின் மொத்த பங்குகளான 4.08 கோடி பங்குகளை வைத்திருந்தது.

பரிமாற்றத்திற்கான ஒப்பந்தத்தில் டாடா ஸ்டீல்- சர்ச்சில் பிரதர்ஸ் கையெழுத்திட்டனர். சர்ச்சில் பிரதமர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் பிரைவேட் லிமிடெட் கோவாவை மையமாக கொண்டு நிறுவனம் ஆகும்.

இந்த ஒப்பந்தத்திற்கு ஆல் இந்தியா கால்பந்து பெடரேசன் (AIFF) ஒப்புதல் தேவை. பிற வழக்கமான ஒப்புதல்களுடன், இந்த ஒப்பந்தம் ஆகஸ்ட் 31-க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி-யின் (Jamshedpur FC) ISL விளையாட்டு உரிமம் மற்றும் 12 வீரர்கள் மற்றும் இரண்டு பயிற்சியாளர்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் ஆகியவை அடங்கும். செப்டம்பர் 2026 முதல் சர்ச்சில் பிரதர்ஸ் (Churchill Brothers) அந்த ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தும்.

2026 நிதியாண்டில் JFSPL நிறுவனம் 32.23 கோடி ரூபாய் வருவாயைப் பதிவு செய்தது. இருப்பினும், மார்ச் 2026 நிலவரப்படி அதன் நிகர மதிப்பு (net worth) எதிர்மறையாக, அதாவது மைனஸ் 5.8 கோடி ரூபாயாக இருந்தது.

எனவே, ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிக்கு நன்கு அறியப்பட்ட பெயர், விளையாட்டுக்கான உரிமம் மற்றும் ISL கட்டமைப்பில் ஓர் இடம் ஆகியவை இருந்தாலும், அதை நிர்வகிக்கும் நிறுவனத்திடம் பெரிய அளவில் பணப்புழக்கம் ஏதும் இருக்கவில்லை. எனவே, இந்த 100 ரூபாய் என்பது லாபம் ஈட்டும் ஒரு விளையாட்டு அணியின் வழக்கமான மதிப்பீடாகக் கருதப்படாமல், ஒரு குறியீட்டு ரீதியிலான உரிமை மாற்றமாகவே பார்க்கப்பட வேண்டும்.

இந்தியக் கால்பந்துக்கு இது ஒரு சவாலான காலகட்டமாகும். ISL தனது வணிக மாதிரி மற்றும் நிதி ரீதியான சாத்தியக்கூறுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எதிர்கொண்டு வருகிறது. தகவல்களின்படி, இந்த லீக்கின் ஊடக ஒளிபரப்பு உரிமத்தின் மதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. அதாவது, JioStar நிறுவனம் ஆண்டுக்கு 275 கோடி ரூபாய் செலுத்தி வந்த நிலையில், 2025-26 சீசனுக்காக FanCode நிறுவனம் வெறும் 8.6 கோடி ரூபாய் மட்டுமே வழங்க முன்வந்துள்ளது.

குறிச்சொற்கள்: INDIAN SUPER LEAGUE
இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel