ஐரோப்பாவில் புதிய வெப்ப அலை: 35 டிகிரிக்கும் அதிகமான வெப்பத்தால் 13.5 கோடி மக்கள் பாதிப்பு

காலநிலை மாற்றத்தால் பெரும்பாலான நாடுகளில் வெப்பம் வாட்டி வதைக்கிறது. ஐரோப்பிய நாடுகள் எப்போதுமே குளிர் பிரதேசமாக விளங்கும். ஆனால், இந்த கோடை அவர்களுக்கு மிகவும் சிரமமாக அமைந்தது. இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா போன்ற நாடுகளில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

சாலைகள் உருகி வாகன டயருடன் ஒட்டிக்கொண்டன. அந்த அளவிற்கு வெயில் சுட்டெரித்தது. இதில் பலர் உயிரிழந்தனர். இந்த நிலையில் தற்போது புதிய வெப்ப அலை உருவாகியுள்ளது. வியாழக்கிழமை அதிக வெப்பநிலை பதிவான நாளாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஜெர்மன் வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமையன்று ஐரோப்பியர்களில் கிட்டத்தட்ட 5-ல் 3 பேர்சுமார் 340 மில்லியன் மக்கள் 30 டிகிரி செல்சியஸுக்கும் (86 டிகிரி ஃபாரன்ஹீட்) அதிகமான வெப்பநிலையை எதிர்கொண்டார்கள் என மதிப்பீடு செய்துள்ளது.

ஆஸ்திரியாவின் கிளாமடாஷ்போர்டு, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ், இந்த கோடைக்காலத்தில் 5-வது வெப்ப அலையை எதிர்கொண்டது என்று தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம், மத்திய மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்தில் வெப்பநிழைல 38 டிகிரியை தொடும் எனத் தெரிவித்துள்ளது. ஜூன் 26-ந்தேதி இங்கிலாந்தில் இந்த வருடத்தில் அதிகமான 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது.

மிதான வெப்பநிலை நிலவினால்தான், ஆகஸ்ட் மாதத்தில் கடந்த வருட அதிகப்பட்ச வெப்ப நிலையை முறியடிக்காமல் இருக்கும் என்று இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகமா வெப்பநிலை, இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையை சாத்தியமற்ற மற்றும் மனிதாபிமானற்ற சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது என்று ராயல்ஸ் நர்சிங் கல்லூரி தெரிவித்துள்ளது.

பணியின்போது ஊழியர்கள் மயங்கி விழுவது, வெப்பம் தொடர்பான காரணங்களால் வலிப்பு ஏற்படுவது மற்றும் கர்ப்பிணி செவிலியர்கள் 30 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலையில் பணியாற்றுவது ஆகியவை குறித்து RCN-ன் உதவி எண்ணுக்குத் தகவல்கள் வந்துள்ளதாக ராயல்ஸ் நர்சிங் காலேஜ் தெரிவித்துள்ளது.

ஏர் கண்டிஷனிங், மின்விசிறிகள் அல்லது போதுமான காற்றோட்ட வசதி கூட இல்லாத சூழலில் தாங்கள் பணியாற்றுவதாகப் பல ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரான்சில் அதிகபட்சமாக 40 டிகிரி வெப்பநிலையை எதிர்கொள்ளும். ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளைப் போலவே பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தும் பரவலான வறட்சியை எதிர்கொண்டுள்ளன. அங்கு பயிர்கள் கருகிப்போனதாலும் ஆறுகள் வற்றியதாலும் வீடுகள், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான நீர் விநியோகம் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தின் விளைவுகளைக் குறைப்பதற்கான குறுகிய மற்றும் நீண்ட காலத் தீர்வுகளைத் தேட வேண்டிய கட்டாயத்திற்கு இது அரசுகளைத் தள்ளியுள்ளது.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel