டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் மோடி
நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நாட்டின் 80வது சுதந்திர தினத்தையொடி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
இதனை தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.
இன்று முன்னதாக, 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராஜ்காட்டில் தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு பிரதமர் மோடி மலர் அஞ்சலி செலுத்தினார்.
மேலும், அவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், விக்ஸித் பாரதத்தை உருவாக்கும் நோக்கில் நாடு செயல்பட்டு வரும் வேளையில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகள் தொடர்ந்து நாட்டிற்கு உத்வேகம் அளித்து வருவதாக பிரதமர் மோடி கூறினார்.
இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் மேலும் வேகமான முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்றும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு நிறைவையும் குறிக்கின்றன.
சுதந்திர தினத்திற்கு முந்தைய நாள், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில், மாணவர்களை இந்தியாவின் எதிர்காலத்தின் சிற்பிகள் என்று குறிப்பிட்டார்.