டிஎன்பிஎல்: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது சேப்பாக்

8 அணிகள் பங்கேற்கும் 10-வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இரு கட்டமாக நடத்தப்படுகிறது.

முதல் கட்ட ஆட்டங்கள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்திலும், இறுதிப்போட்டி உள்ளிட்ட 2-வது கட்ட ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்திலும் நடக்கிறது.

நேற்றைய லீக் போட்டியுடன் திண்டுக்கல் ஆட்டங்கள் முடிவடைந்தன. 2வது கட்ட ஆட்டங்கள் சேப்பாக்கத்தில் நாளை மறுதினம் தொடங்க உள்ளது. இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்கள் ஓய்வு நாளாகும்.

அனைத்து அணிகளும் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி உள்ளன.

இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் அணிகள் பெற்றுள்ள இடங்களின் விவரம்:

மதுரை பாந்தர்ஸ் அணி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ரன்ரேட் அடிப்படையில் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

திருப்பூர் தமிழன்ஸ் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடமும், நெல்லை ராயல் கிங்ஸ் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று நான்காவது இடமும் பிடித்துள்ளன.

நேற்று நடந்த லீக் போட்டியில் திருச்சி அணி 80 ரன்னில் சுருண்டது. இதனால் 2வது இடத்தில் இருந்த அந்த அணி 6 புள்ளியுடன் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel