நாளை 2-வது டெஸ்ட் தொடக்கம்: இங்கிலாந்து அணிக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்குமா?
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 103 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நாளை (27-ந்தேதி) தொடங்குகிறது. ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்த டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் வேட்கையில் உள்ளது.
பாகிஸ்தான் அணி முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெஸ்டில் தோற்றால் அந்த அணி தொடரை இழந்துவிடும். இதனால் பாகிஸ்தான் வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் ஆசம் கைவிரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக முதல் டெஸ்டில் ஆடவில்லை. 2-வது டெஸ்டிலும் அவர் ஆடுவது சந்தேகமே.
இன்றைய வலைப் பயிற்சியின்போது அவர் பேட்டிங் செய்யும் விதத்தை பொறுத்து விளையாடுவாரா? என்பது தெரியவரும்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel