தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

ரெயில் பயணிகளின் கவனத்திற்கு..! தெற்கு ரெயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை கோட்டத்தில் உள்ள பெடாபாரியா மற்றும் நாயுடுபேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் சென்னை சென்ட்ரல்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று (திங்கட்கிழமை), செப்டம்பர் 3,10 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12840), அதற்கு மாற்றாக சென்ட்ரலில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 8 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும்.

* இதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து செப்டம்பர் 5,12 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12840), அதற்கு மாற்றாக சென்ட்ரலில் இருந்து 2 மணி நேரம் தாமதமாக, இரவு 9 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும்.

ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் இருந்து வருகிற செப்டம்பர் 9-ந்தேதி முதல் நவம்பர் 25-ந்தேதி வரையில் (புதன்கிழமை மட்டும்) காலை 11.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.08311), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் அதிகாலை 1.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும். மறுமார்க்கமாக, போத்தனூரில் இருந்து வருகிற செப்டம்பர் 11-ந்தேதி முதல் நவம்பர் 27-ந்தேதி வரையில் (வெள்ளிக்கிழமை மட்டும்) மதியம் 1 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (08312), மறுநாள் இரவு 11.15 மணிக்கு சம்பல்பூர் சென்றடையும்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் சென்ட்ரலில் இருந்து மதுரை செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.01925), வருகிற செப்டம்பர் 2-ந்தேதி முதல் நவம்பர் 25-ந்தேதி வரையில் (புதன்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து கான்பூர் சென்ட்ரல் செல்லும் சிறப்பு ரெயில் (01926), வருகிற செப்டம்பர் 5-ந்தேதி முதல் நவம்பர் 28-ந்தேதி வரையில் (சனிக்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel