தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

அரசு பள்ளியில் உணவு சாப்பிட்ட 2,000 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி: வேகவைக்கப்படாத இறைச்சி காரணமா?

இந்தோனேசியா பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்காக, ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ பல பில்லியன் டாலர் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மத்திய ஜாவா அடுத்த ரெம்பாங் நகரத்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் மக்கான் பெர்கிஸி கிராடிஸ் (Makan Bergizi Gratis) என்ற திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 752 மாணவர்கள் மற்றும் 25 ஆசிரியர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து பள்ளி நிர்வாகம் அந்த பள்ளியில் உள்ள 1,200 மாணவர்களையும் 95 பணியாளர்களையும் வீட்டிற்கு அனுப்பியது.

மேலும் வாந்தி, தலைசுற்று உள்ளிட்ட உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜுஹார்டுடிக் கூறுகையில், “அவர்களுக்கு வயிற்றுப்போக்கு இருந்ததால், அவர்கள் கழிப்பறையை முறைப்படி பயன்படுத்தினார்கள்.

ஆனால் மொத்தம் 40 கழிப்பறைகள் தான் பள்ளியில் இருந்ததால், அவர்கள் அனைவருக்கும் இடமளிக்க முடியவில்லை.

மருத்துவச் செலவுகள் அனைத்தையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும், மேலும் உணவு விநியோகம் செய்த உள்ளூர் உணவு விநியோகஸ்தர்கள் இதற்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்” என அவர் கூறினார்.

இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், முறையற்ற சேமிப்பு மற்றும் சரியாக சமைக்கப்படாத உணவு ஆகியவற்றை சாப்பிட்டதால், மாணவர்களுக்கு உணவு நஞ்சு ஏற்பட்டுள்ளது.

மேலும் அசுத்தமான கோழிக்கறியின் இறைச்சி, சரியாக வேக வைக்கப்படாத அசைவ உணவுகள் மற்றும் சரியான சுத்தம் செய்யாத மீன்கள், இந்த உணவு ஒவ்வாமைக்கு காரணமாக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து உடல் நலக்குறைவு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து உள்ளூர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும் இதில் சாத்தியமான கலப்படம் உள்ளதா என்பதைக் கண்டறிய உணவு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து லாசெமில் உள்ள உணவு விநியோகப் பிரிவின் தலைவர் அஹ்மத் ஷோலே ஷரிஃபுதின், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் மன்னிப்புக் கோரியதோடு, அவர்கள் குணமடைவதற்கான முழுப் பொறுப்பையும் தான் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel