தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ள புதிய தலைமைச் செயலகத்திற்கு மாநகராட்சி, மாவட்ட ஆட்சியர் அனுமதி!

சென்னையின் பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைப்பதற்கு சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதி வழங்கியுள்ளனர்.

நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் அலுவலக வளாகம் கட்டப்படும் என்ற அறிவிப்பை 110 விதியின்கீழ் முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான 21.37 ஏக்கர் நிலம், மாநகராட்சிக்கு சொந்தமான 0.93 ஏக்கர், வருவாய்த்துறை ஆவணங்கள் இல்லாத சுமார் 1.20 ஏக்கர் மொத்தம் 26.36 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய நிர்வாக மையம் அமையவுள்ளது.

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மீனவர்கள், அப்பகுதி மக்கள் மட்டுமின்றி பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காரணம் ஏற்கனவே இட நெரிசலை சந்தித்து வரும் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், இன்னும் கூட்ட நெரிசலை சந்திக்க நேரிடும் என வாதிடுகின்றனர்.

மீனவ மக்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என வாதிடுகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel