தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

வீட்ல சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? - 'மிசா' கொடுமைகள் குறித்து மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீடு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? என்று பதிவிட்டு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில்,

* மிசா காலத்தில் கைது செய்யப்பட்டபோது சிறையில் எங்களுக்கு பல கொடுமைகள் நடந்தது.

* காவலர்கள் தாக்கியதில் எனது அருமை அண்ணன் சிட்டிபாபு இறந்தார். அவர்கள் தாக்கியதில் எனது தாடை எலும்பு உடைந்தது.

* எதிர்த்து போராடுவதும் அதன் விளைவுகளை சந்திப்பதும் எங்களுக்கு புதியது அல்ல.

* யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது.

* உங்களுக்கு சந்தேகம் இருந்தால் சட்டசபையில் உள்ள நூலகத்திற்கு சென்று எனது போராட்ட வரலாற்றை படித்து பாருங்கள்.

* சர்காரியாக கமிஷன் பற்றியும் தலைவர் கலைஞர் பற்றியும் தவறான தகவலை முதலமைச்சர் விஜய் கூறி உள்ளார்.

* அரசியலுக்காக காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் சொன்ன பொய்யான குற்றச்சாட்டையும் முதலமைச்சர் விஜயும் கூறி உள்ளார்.

* அமலாக்கத்துறை குற்றம்சாட்டிய 95% வழக்குகளில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் குற்றம்சாட்டப்பட்டோர் விடுவிக்கப்பட்டனர்.

* பெரும்பாலும் அரசியல் பழிவாங்கலுக்காகவே அமலாக்கத்துறை ஏவப்படுவது இங்கு உள்ள எல்லாருக்குமே தெரியும்.

* தேர்தல் பிரசாரத்தின்போது கடுமையாக விமர்சித்ததற்கு சாரி என்று என்னிடம் கூறினீர்களே?

* பரவாயில்லை தம்பி. நீங்க இப்போ மாநிலத்தின் முதலமைச்சர். யாரைப்பற்றியும் பேசும்போது கண்ணியத்தோடு பேசுங்கள் என்று சொன்னேன். அதையெல்லாம் மறந்துட்டீங்களே.

* தமிழ்நாடு சட்டசபைக்கென ஒரு மாண்பும் மரியாதையும் இருக்கிறது.

* முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு சட்டசபையில் தேவையில்லாத சர்ச்சைகளை பேச வேண்டாம்.

* தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படுகுழியில் இருக்கிறது.

* வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?

* தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை பற்றி வாய் திறக்காமல் இருப்பது ஏன்?

* விதவிதமான ரீல்ஸ் போட்டு ஒரு தலைமுறையையே வீணாக்கி வருகிறீர்கள்.

* வாக்களிக்கவில்லை என்பதற்காக மக்களை திமுகவினர் கைவிட்டு விடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel