தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

சென்னையில் 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு

சென்னையில் 4 இடங்களில் சிலைகளை கரைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள் மற்றும் வழித்தடங்கள் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் 17 வழித் தடங்கள் பிரத்யேகமாக வகைப்படுத்தப்பட்டு, அவ்வழியே விநாயகர் சிலைகளை கொண்டு சென்று சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டு அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. சென்னை, நுங்கம்பாக்கம், சிந்தாதரிப்பேட்டை, எழும்பூர், புதுப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி, ஆர்.கே.நகர், புளியந்தோப்பு, பட்டாளம், சவுகார்பேட்டை, அயனாவரம் ஆகிய இடங்களில் மற்றும் இதன் சுற்றுப்புற இடங்களில் உள்ள விநாயகர் சிலைகள் குறிப்பிட்ட வழித்தடங்கள் வழியாக ஊர்வலமாக சென்று, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் கடலில் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இதே போல, அடையாறு, திருவான்மியூர் மற்றும் சுற்றுப் புற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள், நீலாங்கரை பல்கலை நகர் கடலிலும், வடசென்னை பகுதியான தங்கசாலை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் காசிமேடு மீன்பிடி துறைமுகம் கடலிலும் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel