பா.ஜ.க. தலைவர்களின் மார்பை பிளந்து பார்த்தாலும்.., டி.கே. சிவக்குமார் ஆவேசம்
விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் நேற்று கொண்ாடப்பட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள டி நரசிபுரா டவுன் காவல் நிலை இன்ஸ்பெக்டர், மசூதிக்கு முன் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். விநாயர் சிலை ஊர்வலத்தின்போது, பட்டாசு வெடிக்கக் கூடாது என்பதா? என பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் பாஜக தலைவர்களுக்கு மாநிலத்தின் நலன்கள் மீது அக்கறை இல்லை என்று கர்நாடக மாநில முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர்களின் மார்பை பிளந்து பார்த்தால், அதில் மாநிலத்தின் நலனைக் காக்கும் அம்சம் எதுவும் இருக்காது. மாநில நலன் சார்ந்த விஷயங்களைப் பற்றி விவாதித்துவிட்டு, அதன்பிறகு அரசியல் செய்யுமாறு அவர்களிடம் கூறினாலும், அவர்களைத் திருத்த முடியாது. நீங்கள் என்ன செய்தாலும், அவர்கள் எல்லாவற்றிலும் குறைதான் காண்பார்கள்.
காவல்துறையை பற்றிய ஒருவித அச்சமும் இருக்கத்தான் வேண்டும். அந்த காவலர் என்ன தவறு சொன்னார்? எவ்வித அசம்பாவிதமும் நிகழ்ந்துவிடக் கூடாது என்ற நோக்கத்துடன், காவல்துறைக்கே உரிய பாணியில் அவர் ஒரு எச்சரிக்கையைத்தான் விடுத்தார். ஆனால், பாஜக இந்த விவகாரத்தை வீதிக்குக் கொண்டு வந்துவிட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் இங்கிருந்து (பெங்களூருவிலிருந்து) அங்கு சென்று, மகாராஜாவையும் (மைசூரு அரச குடும்பத்தின் வாரிசும் பாஜக எம்.பி.யுமான யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜா உடையாரைக் குறிப்பிட்டு) தெருவுக்கு அழைத்து வந்து காவல் நிலையத்திற்கு முன் போராட்டம் நடத்தினார். எதிர்க்கட்சித் தலைவர் ஒரு அரசியலமைப்பு ரீதியான பதவியை வகிக்கிறார். அவரிடமிருந்து கண்ணியமான அணுகுமுறையை நான் எதிர்பார்க்கிறேன்.
அவர் (காவல் ஆய்வாளர்) செய்யக்கூடாத எதையும் செய்யவில்லை. நான் அவர்களைக் கைவிடமாட்டேன். ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றால், நிச்சயமாக நாங்கள் அதை எடுப்போம். சட்டம்- ஒழுங்கைப் பராமரிப்பது யாருடைய பொறுப்பு? அவர்கள் (பாஜக) மக்களைத் தூண்டிவிடுகிறார்கள். அவர்கள் அதை நிறுத்த வேண்டும். எப்படியாவது மாநிலத்தில் அமைதியின்மையை உருவாக்கவே பாஜக விரும்புகிறது.
மாநிலத்தின் நற்பெயர் நாட்டின் பிம்பத்துடன் தொடர்புடையது என்பதையும், அது இந்தியாவையே பாதிக்கும் என்பதையும் பாஜக தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள பாஜக தலைவர்கள், நாட்டின் மீதான பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலான அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசியல் செய்யுங்கள், போராட்டங்களை நடத்துங்கள். ஆனால் அமைதியின்மையை உருவாக்கவோ அல்லது மாநிலத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தவோ வேண்டாம் என்று பாஜக-விடம் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel