தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

கோலாகலமாக தொடங்கியது ஆசிய விளையாட்டு: தேசியக்கொடி ஏந்தி வந்த மனு பாக்கர், பவன் ஷெராவத்

ஜப்பான் நாட்டில் உள்ள ஐச்சி நகோயாவில் 20-தாவது ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று (19.09.2026) தொடங்கி அக்டோபர் 4ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

இந்த போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய தடகள் அணி வீரர்கள், ஜப்பான் நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு தங்களின் உடலை பழக்கப்படுத்தும் வகையில், செப்டம்பர் 13 முதல் டோக்கியோவில் உள்ள சுகுபா பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்றனர்.

இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டிக்கான தொடக்க விழா நகோயாவில் உள்ள மிசுஹோ பார்க் தடகள ஸ்டேடியத்தில் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

தொடக்க விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், நடனம், சாகசங்கள், லேசர் ஜாலங்கள் இடம்பெற்றன. இதில் 45 நாடுகளின் வீரர், வீராங்கனைகள் தங்களது தேசிய கொடியுடன் அணிவகுத்து வந்தனர்.

இந்திய அணிக்கு துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் மற்றும் கபடி வீரர் பவன் ஷெராவத் ஆகியோர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்திச் சென்றனர்.

ஆசிய போட்டி தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்திச் செல்வது ஒவ்வொரு வீரர்களின் கனவாகும். அந்த கவுரவத்தை எனக்கு வழங்கிய இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு நன்றி என தெரிவித்தனர்.

கடந்த ஆசிய போட்டியில் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 4வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel