அமலாக்கத்துறை பரிந்துரையின் பேரில் பினராயி விஜயன் மீது விசாரணை நடத்தப்படும்- கேரளம் அரசு அறிவிப்பு
கேரளம் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான பினராயி விஜயன் மகள் வீணா, அவரது கணவரும் முன்னாள் மந்திரியுமான முகமது ரியாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் மீது ஊழல் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தியதோடு பினராயி விஜயன் மற்றும் அவரது மகளின் வீடு, அலுவலகங்கள் போன்றவற்றில் சோதனையும் நடத்தியது.
இதில் வீணாவுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு முைறகேடாக பணம் பெறப்பட்டது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் பினராயிக்கும் தொடர்பு இருப்பதாக கூறிய அமலாக்கத்துறை அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த, மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியது. இதுகுறித்து கேரள முதல்-மந்திரி சதீஷனிடம் கேட்ட போது, சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் பினராயி விஜயன், அவரது மகள் வீணா மற்றும் முகமது ரியாஸ் குறித்து விசாரணை நடத்தப்படும் என கேரள அரசு தற்போது அறிவித்துள்ளது. அமலாக்கத்துறையின் பரிந்துரையின் பேரில் மாதாந்திர கொடுப்பனவு வழக்கு தொடர்பாக அவர்கள் மீது விசாரணை நடத்த மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கு உள்துறை மந்திரி சென்னிதலா உத்தரவிட்டுள்ளார்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel