தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

அசாமில் சிஜேபி இணை நிறுவனர் உட்பட 30 பேர் கைது - ஹிமாந்தாவுக்கு தீப்கே எச்சரிக்கை

அசாமில் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் மற்றைய 2 தேர்தல் ஆணையர்களின் கருத்து புறக்கணிக்கப்பட்டு தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக முடிவெடுத்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என சிஜெபி மற்றும் காங்கிரஸ் தரப்பில் குரல்கள் வலுத்து வருகின்றன.

இந்த சூழலில் அசாமில் சிஜேபி கூட்டம் இன்று நடைபெறவிருந்த நிலையில் அவ்வமைப்பின் இணை நிறுவனர் அசுதோஷ் ரன்கா மற்றும் பிற சிஜேபி உறுப்பினர்கள் கைது செய்யபட்டுள்ளனர்.

தலைநகர் கவுஹாத்தியில் அவர்கள் அசாம் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்கவில்லை என்றால் தானும் பிற சிஜேபி உறுப்பினர்களும் அசாம் வருவோம் என்றும் தங்கள் அனைவரையும் ஹிமாந்தா கைது செய்யட்டும் என்றும் சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அசுதோஷ் அவரின் தங்குமிடத்தில் இருந்து எவ்வித காரணமும் கூறாமல் கைது செய்யப்பட்டார் என்று கூறிய தீப்கே, அவரை கைது செய்ததற்கான காரணத்தை காவல்துறை கூற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அசுதோஷ் உடன் மத்திய கமிட்டியில் உள்ள 4 உறுப்பினர்கள் உட்பட 30 சிஜேபி உறுப்பினர்களும் கைது சேதப்பட்டுள்ளனர். இன்று அங்கு பிராந்திய தன்னார்வலர்கள் கூட்டத்தை இன்று காலை 10 மணியளவில் தனியார் இடத்தில் சிஜேபி நடத்தவிருந்தது குறிப்பிடத்தக்கது.

காவல்துறை இன்று காலை முதல் ரவுடிகளை போல நடந்துகொள்வதாகவும், அமைதியான முறையில் கூட்டம் நடத்த முயலும் தங்கள் உறுப்பினர்களை காவல்துறை தொடர்ந்து கைது செய்து வருவதாகவும் சிஜேபி குற்றம்சாட்டியுள்ளது.

அவர்களின் கைது குறித்து காவல்துறை தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

எத்தனை அழுத்தம் தந்தாலும் சிஜேபி அசாம் மக்களுடனான தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தி, அங்கு அமைப்பை கீழ்மட்டத்தில் இருந்து வலுப்படுத்தும் திட்டத்தை அறிவித்துள்ளது.

"பள்ளிகளை சரி செய்யுங்கள்" என்ற தங்கள் பிரசாரத்தையும், எஸ்ஐஆரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்று சந்தித்து ஆதரவு பெறுவதையும் நோக்கமாக கொண்டு செயல்பட உள்ளதாக சிஜேபி தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel