தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

அவ்வளவு Casual-ஆ வருது: தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பேச்சுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம்

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது த.வெ.க. வேட்பாளர் சத்ய பாமா குறித்து உருவ கேலி செய்யும் வகையில் பேசினார். இதற்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

நான் கோபமாக எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன். வருத்தம் என்று கூட சொல்லக்கூடாது என்று நினைத்தேன். ஏனென்றால் நாங்கள் வருத்தத்தை பதிவு செய்யவில்லை. கண்டனத்தை பதிவு செய்கிறோம்.

முன்னாள் முதலமைச்சர், அண்ணன் மு.க. ஸ்டாலின் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் எனக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. நான் தலைவராக இருக்கும்போது கடுமையாக உருவ கேலி செய்தார்கள். அவர்களின் தொண்டர்கள்தான் செய்து கொண்டிருந்தார்கள் என்று நினைத்தேன். ஆனால் இன்று உதயநிதி, மு.க. ஸ்டாலின் பேசுவதை பார்த்தோம் என்றால் இவர்கள்தான் அவர்களை வழிகாட்டிக் கொண்டிருந்தார்களோ என்ற எண்ணம் வருகிறது.

உள்ளத்தில் இப்படி ஒரு எண்ணம் இல்லை என்றால் வார்த்தைகளில் வராது. பெண்கள் அரசியலுக்கு வருவதே சிரமம். த.வெ.க. வேட்பாளர் ஏற்கனவே தன்னை கேலி செய்வதாக அழுதார். எல்லோரும் இரும்பு மனம் கொண்ட பெண்களாக இருந்துவிட முடியாது. அரசியலுக்கு வருவோர் எல்லாம் துணிச்சலமாகவும் இருந்துவிட முடியாது. ஆகவே, பெண்கள் அரசியலுக்கு வருவதை ஆரோக்கியமாக பார்க்க வேண்டும்.

ஆகவே, இந்த தலைவர்கள் எல்லாம் சமூகத்திற்கு இல்லை, பெண் முன்னேற்றத்திற்கு இல்லை. சுய வாக்கிற்காக இருக்கிறார்களோ என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எனது கடுமையான கண்டத்தை தெரிவித்து..,

பெண்களை பற்றி யராவது பெண்களை உருவ கேலி செய்தால், அவ்வளவு Casual-ஆ வருது உங்களுக்கு.., பெண்கள குறித்து எந்த அளவிற்கு மனதில் அவ்வளவு தரக்குறைவா எண்ணம் இருந்தது.., அவ்வளவு Casual ஆக.., பெண்களின் உருவத்தை பற்றி வருகிறது என்றால் உண்மையிலேயே நான் மிகவும் கோபம் அடைந்தேன்.

எனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறேன். இனிமேல் ஆண் தலைவர்கள் பேசும்போது எச்சரிக்கையாக பேச வேண்டும் என்று எச்சரிக்கையாகவே சொல்கிறேன். டைம் பாஸ்-ஆ பேசிக்கிட்டு போலாம், கேஷுவலாக பேசிக்கிட்டு போலாம் என நினைக்கக் கூடாது. அரசியலில் நீங்கள் இருக்கும் நிலையில்தான் அவங்களும் இருக்கிறார்கள். ஆண் தலைவர்களை பெண் தலைவர்கள் கேலி செய்கிறார்களா? உருவ கேலி செய்கிறோமா?.

தொடர்ந்து பெண்களை பற்றி ஏன் சொல்லீங்க. பெண்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்று நினைக்கிறீர்களா? உங்கள் கட்சியில் பெண் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களை பற்றி உங்கள் எண்ணம் எப்படி இருக்கிறது?. இதை மிகவும் கடுமையாக பதிவு செய்கிறேன்.

இவ்வாறு தமிழிசை சவுரந்தராஜன் கண்டனம் தெரிவித்தார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel