தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

இந்திய விமானி ஸ்மித் மச்சாரை சந்தித்து பாராட்டிய துபாய் இளவரசர்

துபாயில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகருக்கு கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 30-ந்தேதி) ப்ளைதுபாய் என்ற பயணிகள் விமானம் 180 பேருடன் புறப்பட்டது. இந்த விமானத்தை இந்தியாவைச் சேர்ந்த ஸ்மித் மச்சார் இயக்கினார். துணை விமானயாக ஓமனைச் சேர்ந்த ஹமாம் அல் ஹமாமி என்பது இருந்தார்.

திடீரென ஓமனைச் சேர்ந்த துணை விமானி, ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்தி, விமானத்தை தரையில் மோதி விபத்தை ஏற்படுத்த முயன்றார். ஆனால், இந்திய விமானி ஸ்மித் மச்சார் சிறப்பாக செயல்பட்டு விமானத்தை சவுதி அரேபியாவில் பத்திரமாக தரையிறக்கினார். இதனால் விமானிகள் உயிர்தப்பினர்.

சிறப்பாக செயல்பட்டு விமான விபத்தை தடுத்த இந்திய விமான ஸ்மித் மச்சாருக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சவுதி அரேபியாவில் முதற்கட்ட சிகிச்சை பெற்ற ஸ்மித் மச்சார், தற்போது துபாயில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஸ்மித் மச்சாரை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் துபாய் இளவரசரான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் இன்று மருத்துவமனையில் ஸ்மித் மச்சாரை சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன் அவருடைய வீரச் செயலை வெகுவாக பாராட்டினார்.

இது தொடர்பாக துபாய் இளவரசர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் சார்பாகவும், நாட்டின் தலைமைத்துவத்தின் சார்பாகவும் அவருக்கு முழுமையான பாராட்டும் அங்கீகாரமும் உரித்தாகுக. அவர் எங்கள் குழுவின் ஒரு பகுதியாக இருப்பதிலும், நமது நாட்டின் வரலாற்றின் ஒரு அங்கமாகத் திகழ்வதிலும் கருணை, அமைதி மற்றும் வாழ்வை முன்னிறுத்தும் நாடாகத் திகழும் ஐக்கிய அரபு அமீரகத்தின் விழுமியங்களைப் பிரதிபலிப்பதிலும் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

இவ்வாறு துபாய் இளவரசர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel