சிறப்புச் செய்தி

அதிக பயணிகள்: டாப் 10-ல் இடம் பிடித்த தாம்பரம் ரெயில் நிலையம்?

9 hours ago 15 பார்வைகள்
அதிக பயணிகள்: டாப் 10-ல் இடம் பிடித்த தாம்பரம் ரெயில் நிலையம்?

உலகின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்காக இந்திய ரெயில்வே திகழ்கிறது. ஒரு நாளைக்கு சுமார் 2.4 கோடி பயணிகள் ரெயில் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். மும்பை புறநகர் ரெயில் நெட்வொர்க் முதல் டெல்லி- ஹவுரா என அதிக அளவில் பயணிகள் பயணம் செய்யும் வழித்தடமாக இருந்து வருகின்றன.

பொதுவாக டெல்லி, மும்பை, ஹவுரா, பெங்களூரு, சென்னை சென்ட்ரல், சென்னை எக்மோர் ரெயில் நிலையங்களில் பயணி வருகை அதிகமாக இருக்கும் என்பது பொதுவான விசயம். ஆனால், 2023-24-ம் ஆண்டில் அதிக அளவில் பயணிகள் வந்து சென்ற ரெயில் நிலைய பட்டியலை இந்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது.

மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே ரெயில் நிலையில் 9.30 கோடி பயணிகள் மூலம் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதே மாநிலத்தில் உள்ள கல்யாண் ரெயில் நிலையம் 8.37 கோடி பயணிகள் மூலம் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

கொல்கத்தாவில் உள்ள ஹவுரா ரெயில் நிலையம் 6.13 கோடி பயணிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது. மும்பை 5.16 கோடி பயணிகளுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளது. மத்திய கொல்கத்தாவில் உள்ள சீல்டா 5.13 பணிகள் பதிவுடன் 5-வது இடத்தை பிடித்துள்ளது. பல்வான் (நவி மும்பை) 4.62 கோடியுடன் 6-வது இடத்தை பிடித்துள்ளது.

டெல்லி ரெயில் நிலையம் 3.96 கோடி பயணிகளுடன் 7-வது இடத்தை பிடித்துள்ளது. சென்னையில் தாம்பரம் ரெயில் நிலையம் 3.27 கோடி பயணிகளுடன் 8-வது இடத்தை பிடித்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் 3.05 பயணிகளுடன் 10-வது இடத்தை பிடித்துள்ளது. தாதர் (மும்பை) 3.22 கோடி பயணிகளுடன் 9-வது இடத்தை பிடித்துள்ளது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்