சிறப்புச் செய்தி

டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்: சாதனை படைத்த அர்ஷ்தீப் சிங்

1 hour ago 12 பார்வைகள்
டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்: சாதனை படைத்த அர்ஷ்தீப் சிங்

இந்திய அணி நியூசிலாந்தில் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் முடிவில் இந்தியா 3-0 என டி20 தொடரைக் கைப்பற்றியது.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 259 ரன் குவித்தது.

இந்நிலையில், இந்தப் போட்டியில் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னரை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் அர்ஷ்தீப் சிங் தனது 150-வது டி20 விக்கெட்டை கைப்பற்றினார்.

இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியப் பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார்.

இச்சாதனை மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அர்ஷ்தீப் 9-வது இடம் பிடித்தார்.

சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் நிறைந்த இப்பட்டியலில் 150 விக்கெட்டுகளை கடந்த மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.

நியூசிலாந்தின் டிம் சவுத்தி, வங்கதேசத்தின் முஸ்தபிசுர் ரகுமான் ஆகியோர் 150 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்