இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு கடந்த அக்டோபர் 27 அன்று தேர்தல் நடைபெற்றது.
வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் மொத்தம் உள்ள 121 இடங்களில் நேதன்யாகுவின் லிகுத் கட்சி தலைமை தாங்கும் அணிக்கு 53 இடங்களும், காடி ஐசென்கோட் தலைமையிலான எதிரணிக்கு 48 இடங்களும் அரபு காட்சிகளுக்கு 19 இடங்களும் கிடைத்துள்ளன.
இதனால் பெரும்பான்மைக்கு தேவையான 61 இடங்கள் யாருக்கும் கிடைக்காமல் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரபு கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என நேதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துவிட்ட நிலையில் பிற வலதுசாரி கட்சிகளை தன் பக்கம் இழுக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
மறுபுறம் ஐசென்கோட் அணியில் இருக்கும் வலதுசாரி கட்சிகளும் அரபு கட்சிகளுடன் கூட்டணி வைக்க எதிர்ப்பு தெரிவிப்பதால் அவரும் 19 இடங்கள் கொண்ட அரபு கட்சிகள் ஆதரவை கோர மாட்டார் என கருத்து நிலவுகிறது.
நேதன்யாகுவின் லிகுத் கட்சி மட்டுமே 27 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தபோதிலும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல எதிரணிக்கு தலைமை தாங்கும் காடி ஐசென்கோட் உடைய யாசர் கட்சி மட்டுமே 21 இடங்களை வென்றுள்ளது.
இஸ்ரேல் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு, அதாவது சுமார் 21 சதவீதம் பாலஸ்தீன வம்சாவளி வந்த அரபு இஸ்ரேல் குடிமக்கள் ஆவர். அவர்களின் ஆதரவை பெறுவது இஸ்ரேலின் யூத சித்தாந்தத்திற்கு முரணமாக நேதன்யாகுவின் பக்கம் உள்ள வலதுசாரி மற்றும் மத அடிப்படைவாதிகளால் சித்தரிக்கப்பட்டுள்ளது.
எனவே அரபு கட்சிகள் கிங் மேக்கராக இருக்க தேவையான இடங்களை வைத்துள்ளபோதும் அவை தனிமயப்படுத்தப்பட்டுள்ளன.
அரபு கட்சிகள் தேர்தலில் முறைகேடு செய்து வென்ரதாகவும் நேதன்யாகுவின் லிகுத் கட்சி குற்றம்சாட்டி அதற்கான விசாரணையை கோரி உள்ளது. இந்த சூழலில் அதிக இடங்களை கொண்ட நேதன்யாகு அணியை ஆட்சி அமைக்க இஸ்ரேல் பிரதமர் அழைக்கலாம் என கூறப்படுகிறது.
ஆனால் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்காத பட்சத்தில் இஸ்ரேலில் தொங்கு நாடாளுமன்றம் அமைய வாய்ப்புள்ளது.
இதனால் மீண்டும் தேர்தல் நடைபெறும் என்றே கருதப்படுகிறது. இதற்கு முன்னரும் இஸ்ரேலில் இவ்வாறு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் மாதக்கணக்கில் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டு மறுதேர்தல்கள் நடந்த வரலாறும் உண்டு.