சிறப்புச் செய்தி

கொள்கைக்கு சமரசம் செய்யாதவர் முத்துராமலிங்க தேவர்- துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்

3 hours ago 13 பார்வைகள்
கொள்கைக்கு சமரசம் செய்யாதவர் முத்துராமலிங்க தேவர்- துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின்119-வது ஜெயந்தி, 64-வது குருபூஜை விழா நடைபெற்று வருகிறது.

இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

அரசியலுக்காக சமரசம் செய்திருந்தால் முத்துராமலிங்க தேவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்திருப்பார்.

நேதாஜியை தலைவராக ஏற்று தெய்வீக எழுச்சிக்காக தமிழ் மண்ணில் வாழ்நாள் எல்லாம் உழைத்தவர் முத்துராமலிங்கர்.

அவர் கொண்ட கொள்கைக்கு எதிராக சமரசம் செய்யாமல் நேர்மை, கண்ணியம், தவம் என வாழ்ந்தவர் முத்துராமலிங்கர்.

தேசியமும், தெய்வீகமும் என்றும் அழியாமல் பாதுகாப்பது தான் முத்துராமலிங்கருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்