சிறப்புச் செய்தி

அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.2.31 லட்சம் கோடி

1 hour ago 12 பார்வைகள்
அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.2.31 லட்சம் கோடி

அக்டோபர் மாதத்தில் மொத்த ஜி.எஸ்.டி வரி வசூல் 23 சதவீதம் அதிகரித்து ரூ.2.31 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

உள்நாட்டு விற்பனை மூலம் கிடைத்த மொத்த ஜி.எஸ்.டி வசூல் 16 சதவீதம் அதிகரித்து ரூ.1.59 லட்சம் கோடியாகவும், இறக்குமதி மூலம் கிடைத்த வருவாய் 42 சதவீதம் அதிகரித்து ரூ.72,246 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

இந்த ரூ.2.31 லட்சம் கோடி வசூலில் மத்திய ஜி.எஸ்.டி ரூ.42,935 கோடியாகவும், மாநில ஜி.எஸ்.டி ரூ.51,340 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி ரூ.1.37 லட்சம் கோடிக்கு மேலாகவும் உள்ளன.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்