தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

வட தமிழகத்தில் நாளை பெரிய சம்பவம் இருக்கு: அலர்ட் கொடுத்த வெதர்மேன்!

தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நள்ளிரவு புயலாக வலுப்பெற்றது. தொடர்ந்து கடந்த ஆறு மணி நேரத்தில் வடமேற்கு திசையில் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் இந்தப் புயலானது , சென்னைக்கு தென்கிழக்கில் 550 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

தொடர்ந்து இது வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியை நோக்கி நெருங்கி வரும் நாளை நள்ளிரவு புதுச்சேரிக்கும் - ஸ்ரீஹரிகோட்டா விற்கும் இடையே 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்றுடன் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக இன்று கடலோரப் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் நாளை தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மிக முதல் அதிக கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


இந்த நிலையில் மாண்டஸ் புயல் குறித்து பதிவிட்டுள்ள தமிழ்நாடு வெதர்மேன், சூறாவளி வடக்கில் முகடுகளுடன் நன்றாக வெளியேறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கில் இருந்து ஈரப்பதம் தொடர்வதால் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக பதிவிட்டுள்ளார். மேலும் வட தமிழகத்திற்கு நாளை ஒரு பெரிய நாளாக இருக்கும் என்றும் எதிர்பார்ப்புகளைக் குறைத்து, இயற்கை நமக்குத் திட்டமிடப்பட்ட அனைத்தையும் அனுபவிப்போம் என தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel