நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே.ஜெயக்குமார் கடந்த மே மாதம் 4-ந்தேதி உடல் எரிக்கப்பட்ட நிலையில் கரைசுத்து புதூரில் அவரது வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது சாவில் மர்மம் நீடித்து வந்த நிலையில் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு கோணங்களில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசியும் நெல்லைக்கு நேரடியாக வருகை தந்து விசாரணையை மேற்கொண்டார்.ஆனாலும் இதுவரை பெரிதாக துப்பு துலங்கவில்லை. ஜெயக்குமாரின் மர்மச்சாவு குறித்த சி.பி.சி.ஐ.டி. விசாரணை மந்த கதியிலேயே இருக்கிறது. இதற்கிடையே நேற்று திசையன்விளை பகுதியை சேர்ந்த காங்கிரஸ் மாநில மனித உரிமைத்துறை நிர்வாகி விவேக் முருகன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் மருதூர் மணிமாறன் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் பாளை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர். 2 பேரிடமும் 4 அதிகாரிகள் கொண்ட குழு தலா 2 மணி நேரம் தனித்தனியாக விசாரணை நடத்தியது.
அப்போது அவர்களிடம் ஜெயக்குமாருக்கு ஏதேனும் பெண்களுடன் தொடர்பு இருந்ததா? அவருடன் யாரேனும் அடிக்கடி உடன் வருவார்களா? அவர் தனது மரண வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ள தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்களுடன் ஜெயக்குமாருக்கு எந்த வகையில் பழக்கம் இருந்தது என்பது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு 2 பேரும் கூறிய தகவல்களை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.
இதனால் கடந்த சில நாட்களாக விசாரணை மந்தமாக நடந்து வந்த நிலையில் இன்று மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதனிடையே இன்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் தலைமையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் திசையன்விளையில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் இன்று அதிகாலையிலேயே ஒரு வேன் மற்றும் 3 ஜீப்புகளில் திசையன்விளை சென்று விசாரணையை தொடங்கினர்.
செல்லும் வழியில் மணியன்குடி என்ற கிராமத்தில் வாகனத்தை நிறுத்தி விசாரித்து விட்டு பின்னர் கரைசுத்துபுதூர் நோக்கி விரைந்தனர். சுமார் 30 போலீசார் வந்துள்ளதால் திசையன்விளை சுற்றுவட்டார பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
பபிள்கம்-ஐ முதன்முதலாக கண்டுபிடித்தவர் யார் ?
பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?
உடம்பு இல்லாதவனுக்கு தலையுடன் பூவும் உண்டு அவன் யார்?
அதிமுக தோல்விக்கு துரோகிகளே காரணம் - செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு
கள் இறக்க அனுமதி கோரி மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு தயாராகும் விவசாயிகள்
செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு
தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!