ராஜஸ்தானில் மனைவியை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற கணவர் கைது

By Admin | Published in செய்திகள் at ஆகஸ்ட் 14, 2024 புதன் || views : 368

ராஜஸ்தானில் மனைவியை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற கணவர் கைது

ராஜஸ்தானில் மனைவியை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற கணவர் கைது

ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் மாவட்டத்தில், தனது விருப்பத்துக்கு மாறாக தங்கை வீட்டுக்குச் சென்ற மனைவியை, கணவர் பைக்கில் கட்டி இழுத்துச் செல்லும் விடியோ கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த சம்பவத்தில் தொடர்புடைய பிரேமா ராம் மேக்வால் (35) கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த தம்பதிக்கு 10 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்ததாகவும், இந்த வெட்கக்கேடான சம்பவம் பச்சௌடி கிராமத்தில் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டிருக்கும் பிரேமா ராம் மிகவும் கொடுமைக்காரர் என்றும், போதைக்கு அடிமையான இவர், தொடர்ந்து மனைவியை துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.இப்போது வெளியாகியிருக்கும் விடியோ, ஒரு மாதத்துக்கு முன்பு நடந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்டது என்றும், கடநத் சனிக்கிழமை, பிரேமா ராம் தனது நண்பருடன் போதையில் சண்டையிட்டதால், ஆத்திரத்தில் அந்த நண்பர் இந்த விடியோவை தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டதால் இது வெளிச்சத்துக்கு வந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த விடியோவில், பிரேமா ராம் தனது பைக்கில், மனைவியை கட்டி இழுத்துச் செல்கிறார். மணல் பாங்கான சாலையில், பெண் ஒருவர் பைக்கில் கட்டி இழுத்துச் செல்லப்படும் காட்சி பார்ப்பவர்களை பதற வைக்கும் விதத்தில் உள்ளது.பத்து மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணமானது முதல் பிரேமா ராம் மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார். மனைவி, கடந்த மாதம் தனது சகோதரி வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிக்குச் செல்ல விரும்பியிருக்கிறார். ஆனால் அவரை செல்லக்கூடாது என்று பிரேமா தடுத்து, அவர் சென்றதால், ஆத்திரமடைந்துள்ளார். அங்குச் சென்று தனது மனைவியை பைக்கில் கட்டி வீடு வரை அழைத்துச் செல்ல முற்பட்டுள்ளார். அங்கிருந்த கிராமத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், மனைவியின் கட்டை அவிழ்த்திருக்கிறார். இது குறித்து அப்போது காவல்நிலையத்தில் எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை.

இதனை பிரேமா ராமின் நண்பர் விடியோ பதிவு செய்திருந்த நிலையில், தற்போது அது வெளியாகி, கைது நடவடிக்கை எடுக்கக் காரணமாக அமைந்துள்ளது. .

RAJASTHAN DOMESTIC VIOLENCE
Whatsaap Channel
விடுகதை :

ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?

விடுகதை :

ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?

விடுகதை :

ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம் – அவன் யார்?

2-வது டெஸ்ட்: ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு... இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

2-வது டெஸ்ட்: ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு... இங்கிலாந்தை வீழ்த்தி  இந்தியா அபார வெற்றி

Fact Check : அண்ணாமலை உடன் இருப்பது நிகிதா இல்லை... அவர் யார் தெரியுமா?

Fact Check : அண்ணாமலை உடன் இருப்பது நிகிதா இல்லை... அவர் யார் தெரியுமா?

திருப்புவனம் அஜித் குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

திருப்புவனம் அஜித் குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

போதைப் பொருள் பயன்பாடு- நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவப் பரிசோதனை

போதைப் பொருள் பயன்பாடு- நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவப் பரிசோதனை

போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை

போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

prev whatsapp Twitter facebook next