INDIAN 7

Tamil News & polling

அமரனின் மெகா வெற்றி; சிவகார்த்திகேயனை நேரில் அழைத்து பாராட்டிய பாதுகாப்பு அமைச்சர்!

30 நவம்பர் 2024 02:11 AM | views : 703
Nature

கடந்த தீபாவளி திருநாளுக்கு வெளியான 4 முக்கிய திரைப்படங்களில் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் திரைப்படம் தான் அமரன். சிவகார்த்திகேயனின் கரியர் பெஸ்ட் திரைப்படமாக மாறி இருக்கிறது இந்த திரைப்படம் என்றால் அது சற்றும் மிகையல்ல. அந்த அளவிற்கு மிகப்பெரிய வரவேற்போடு இந்த திரைப்படம் இன்றளவும் பயணித்து வருகிறது.




முதல்முறையாக பிரபல நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் ஒரு திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். ஏற்கனவே பிரபல நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ரங்கூன் என்ற திரைப்படத்தை இயக்கி புகழ்பெற்ற ராஜ்குமார் பெரியசாமி இந்த அமரன் திரைப்படத்தை இயக்க, பிரபல நடிகை சாய் பல்லவி இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து அசத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அளவில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்புகளை இந்த திரைப்படம் பெற்று வருகிறது.




தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரரான முகுந்த் வரதராஜனின் கதையைத்தான் அமரன் திரைப்படம் எடுத்துரைக்கிறது. இந்த திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தை தான் சிவகார்த்திகேயன் ஏற்று நடித்திருந்தார். ஒரு ராணுவ வீரரின் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்து நிலையில், அதற்காக பிரத்தியேகமாக சில பயிற்சிகளை இந்திய ராணுவ அதிகாரிகளிடமிருந்து சிவகார்த்திகேயன் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தை பார்த்த பல இந்திய ராணுவ அதிகாரிகள் சிவகார்த்திகேயனை வியந்து பாராட்டி வருவதும் அனைவரும் அறிந்ததே.




இந்த சூழலில் இன்று இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக செயல்பட்டு வரும் ராஜ்நாத்சிங் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட சில பட குழுவினரை நேரில் அழைத்து இந்த திரைப்படத்திற்காக அவர்களுக்கு மிகப்பெரிய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். பல விஷயங்கள் இதில் தத்துரூபமாக அமைக்கப்பட்டிருப்பதற்கு படக்குழுவிற்கு தன்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்