INDIAN 7

Tamil News & polling

டெல்லி கார் வெடிப்பு எதிரொலி; தமிழகம் முழுவதும் உஷார் நிலை

10 நவம்பர் 2025 03:39 PM | views : 152
Nature

சென்னை,

டெல்லி செங்கோட்டை அருகே இன்று மாலை 6.30 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது. இந்த பகுதி, மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாகவும் உள்ளது. சாந்தினி சவுக் சந்தை உள்பட பல முக்கிய பகுதிகள் இதனருகே அமைந்துள்ளன. இந்த சூழலில் கார் வெடித்து சிதறிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த இடத்தில் கூடியிருந்த மக்கள் கார் வெடித்ததும் அலறியடித்து நாலாபுறமும் தப்பியோடினர்.

இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்தி உள்ளது. இதுதவிர 24 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் டெல்லி காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். டெல்லி விமான நிலையம், ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக சென்னை எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்களில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், பயணிகள் பெயரில் ஊடுருவல் ஏதும் நடக்கின்றதா? என்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட எல்லைகளிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அதிகம் கூட கூடிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

டெல்லி கார் வெடிப்பு எதிரொலி; தமிழகம் முழுவதும் உஷார் நிலை1

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்