POLLING 📊 TN ELECTION 2026

 

விஜய் கட்சிக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் - தேர்தல் கமிஷனில் த.வெ.க. மனு

4 months ago 12 நவம்பர் 2025 03:28 AM | views : 213
சென்னை,

2026 தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில், மக்கள் சந்திப்பை முன்னெடுத்து வந்த த.வெ.க.வுக்கு கரூர் நிகழ்வு தீரா வலியை ஏற்படுத்தி விட்டது. அந்த சோக நிகழ்வில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக த.வெ.க. மீண்டு வருகிறது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்சி பணியாற்ற விஜய் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

சட்டசபை தேர்தலுக்கு 6 மாதங்களே இருக்கும் நிலையில், த.வெ.க.வுக்கு தேர்தல் சின்னம் பெறுவதற்கான நடவடிக்கையில் விஜய் இறங்கியுள்ளார். முன்னதாக த.வெ.க. கட்சி கடந்த பிப்ரவரி 7-ந் தேதி அன்று தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்படாத கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்களுக்கு என்று தேர்தல் கமிஷன் 184 சின்னங்களை பட்டியலிட்டு வைத்துள்ளது.

தேர்தல் கமிஷன் விதிகளின்படி, பதிவு செய்துள்ள புதிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாங்கள் விரும்பும் 5 முதல் 10 சின்னங்களை குறிப்பிட்டு இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கால அவகாசம் அளித்துள்ளது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் த.வெ.க.வுக்கு சின்னம் கேட்டு கட்சியின் இணை பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார் மற்றும் நிர்வாகிகள் நேற்று விண்ணப்பித்துள்ளனர்.

இந்த மனுவில், ‘ஆட்டோ-ரிக்‌ஷா', ‘விசில்', ‘கிரிக்கெட் பேட்' உள்ளிட்ட 10 சின்னங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் ‘ஆட்டோ ரிக்‌ஷா' சின்னம் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும்போது, இந்த சின்னத்துக்கு முன்னுரிமை அளிக்குமாறும் மனுவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சின்னம் கேட்டு புதிய கட்சிகள் அளிக்கும் அனைத்து மனுக்களையும் தேர்தல் கமிஷன் ஆய்வு செய்து முடிவு எடுக்கும். பின்னர், எந்தெந்த கட்சிகளுக்கு என்னென்ன சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அந்தந்த கட்சிகளுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கும். இந்த நடைமுறை டிசம்பர் மாத இறுதியில் தொடங்கும்.

‘2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. தலைமையில்தான் கூட்டணி, முதல்-அமைச்சர் வேட்பாளர் விஜய்’ என்று சமீபத்தில் நடைபெற்ற அக்கட்சியின் சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. போட்டியிடும் சின்னம் சட்டென்று மக்கள் மனதில் பதிய வேண்டும் என்பது விஜய்யின் விருப்பமாக உள்ளது. எனவே ‘ஆட்டோ ரிக்‌ஷா' சின்னம் கிடைத்தால், மக்களிடம் எளிதில் கொண்டு சேர்த்து விடலாம் என்பதும் விஜய்யின் வியூகமாகவும் இருப்பதாக கூறப்படுகிறது.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக பாஜக சென்னை BJP CHENNAI அண்ணாமலை TVK தவெக AMMK ANNAMALAI TAMIL NADU MK STALIN TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி AIADMK ANBUMANI RAMADOSS ADMK டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் மு.க.ஸ்டாலின் PMK பாமக முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் தமிழக வெற்றிக் கழகம் கைது ரஜினிகாந்த் கனமழை CONGRESS காங்கிரஸ் திருமாவளவன் சீமான் PARLIAMENT ELECTION தமிழ்நாடு கொலை இந்திய அணி கோவை UDHAYANIDHI STALIN சட்டசபை தேர்தல் KEERTHY SURESH INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI பிரதமர் மோடி அமமுக COIMBATORE THIRUMAVALAVAN தீபாவளி AJITH வடகிழக்கு பருவமழை TAMILAGA VETTRI KAZHAGAM தென்காசி TAMIL ACTRESS ASSEMBLY ELECTIONS ELECTION COMMISSION தேவர் NELLAI நெல்லை OPS NORTHEAST MONSOON வன்னியர் SEEMAN டிரெண்டிங் கொரோனா டாப் நியூஸ் கள்ளக்காதல் நடிகை CSK மதுரை திருப்பரங்குன்றம் PRIME MINISTER MODI கீர்த்தி சுரேஷ் இந்தியா விடுமுறை தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி பாலியல் தொல்லை அஜித்