INDIAN 7

Tamil News & polling

கடலுக்கு அடியில் ஆசியாவின் மிகப்பெரிய தங்க படிமத்தை கண்டுபிடித்த சீனா

22 டிசம்பர் 2025 02:39 AM | views : 9
Nature

பீஜிங்:

உலகின் மதிப்புமிக்க உலோகங்களுள் ஒன்று தங்கம். மின்னல் வேகத்தில் இதன் விலை ஏறினாலும் மக்களிடம் இதற்கான மவுசு குறையவில்லை. இந்த தங்கத்தை அதிகம் உற்பத்தி செய்யும் நாடாக சீனா உள்ளது. அதேசமயம் தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளில் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து 3-வது இடம் வகிக்கிறது.

இந்தநிலையில் மேலும் பல தங்க படிமங்களை கண்டுபிடிக்க சீனா ஆர்வம் காட்டி வருகிறது. அதன்படி தற்போது ஷான்டாங் மாகாணம் லைஜோ நகரின் கடலுக்கு அடியில் ஆசியாவின் மிகப்பெரிய தங்க படிமத்தை சீனா கண்டறிந்துள்ளது. இதன் மொத்த தங்க இருப்பு சுமார் 39 லட்சம் கிலோ என மதிப்பிடப்பட்டு உள்ளது. இது அந்த நாட்டின் மொத்த தங்க கையிருப்பில் 26 சதவீதம் ஆகும். எனவே லைஜோ பகுதியானது சீனாவின் தங்க இருப்பு மற்றும் உற்பத்தியில் முதலிடத்தை பிடித்துள்ளது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்