POLLING 📊 TN ELECTION 2026

 

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கம்

3 months ago 22 டிசம்பர் 2025 02:49 AM | views : 247
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சென்னை சென்டிரல் - மங்களூரு, ஈரோடு - நாகர்கோவில், செந்திராபாத் - வேளாங்கண்ணி, பெங்களூரு - கொல்லம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

கர்நாடக மாநிலம் மங்களூரு ஜங்சனில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 30-ந்தேதி காலை 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06126), அதேநாள் இரவு 11.30 மணிக்கு சென்னை சென்டிரல் சென்றடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் காலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06125), அதேநாள் இரவு 11.30 மணிக்கு மங்களூரு ஜங்சன் சென்றடையும்.

ஈரோட்டில் இருந்து நாளை மற்றும் 30-ந்தேதி மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06025), மறுநாள் மதியம் 1.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து வருகிற 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும் சிறப்பு ரெயில் (06026), மறுநாள் இரவு 8.30 மணிக்கு ஈரோடு சென்றடையும்.

அதேபோல, தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து நாளை இரவு 7.25 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணி செல்லும் சிறப்பு ரெயில் (07407), மறுநாள் மாலை 5.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுமார்க்கமாக, வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 25-ந்தேதி காலை 8 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07408), மறுநாள் காலை 6.10 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

மேலும், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து வருகிற 25-ந்தேதி மதியம் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06573) மறுநாள் காலை 6.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து 26-ந்தேதி காலை 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06574) மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக AMMK ANNAMALAI MK STALIN TAMIL NADU ADMK எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரன் AIADMK தமிழகம் பாராளுமன்ற தேர்தல் உதயநிதி ஸ்டாலின் PMK முக ஸ்டாலின் பாமக தமிழக வெற்றிக் கழகம் அன்புமணி ராமதாஸ் கனமழை CONGRESS காங்கிரஸ் ரஜினிகாந்த் கைது சீமான் திருமாவளவன் PARLIAMENT ELECTION தமிழ்நாடு கோவை கொலை UDHAYANIDHI STALIN இந்திய அணி சட்டசபை தேர்தல் EDAPPADI PALANISWAMI COIMBATORE தீபாவளி KEERTHY SURESH INDIAN CRICKET TEAM AJITH பிரதமர் மோடி வடகிழக்கு பருவமழை அமமுக வன்னியர் ASSEMBLY ELECTIONS NELLAI நெல்லை TAMIL ACTRESS TAMILAGA VETTRI KAZHAGAM தென்காசி தேவர் THIRUMAVALAVAN டிரெண்டிங் டாப் நியூஸ் SURIYA கீர்த்தி சுரேஷ் இந்தியா நடிகை தூத்துக்குடி மதுரை PRIME MINISTER MODI விடுமுறை MADURAI NORTHEAST MONSOON கொரோனா ELECTION COMMISSION SEEMAN OPS திருப்பரங்குன்றம் பாலியல் தொல்லை CSK அஜித்