INDIAN 7

Tamil News & polling

சென்னை விமான நிலையத்தில் போதிய விமானங்கள் இல்லாமல் பயணிகள் கடும் அவதி

23 டிசம்பர் 2025 05:05 AM | views : 183
Nature

சென்னை,

சென்னையில் வேலைவாய்ப்பு, உயர்கல்வி, வணிகம், தொழில் ரீதியாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மக்கள் புலம்பெயர்ந்து வந்து வசித்து வருகின்றனர். இவ்வாறு சென்னையில் வசிக்கும் பிற மாவட்ட மக்கள் விழாக்காலங் களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விடுமுறையை கழிப்பது வழக்கம்.

அந்த வகையில், நாளை அரையாண்டு தொடர் விடுமுறை தொடங்குகிறது, நாளை மறுநாள் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு, சென்னையில் இருந்து மதுரை, கோவை, சேலம், திருச்சி, நெல்லை மற்றும் நாகர்கோவில் போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ் கட்டணம் வழக்கத்தை விட 2 முதல் 3 மடங்கு வரை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகளுக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகள், போதிய விமானங்கள் இல்லாமல் கடும் அவதி அடைந்துள்ளனர். தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சேலம் செல்லும் நேரடி விமானங்கள் அனைத்திலும் டிக்கெட்கள் இல்லாததால், பெங்களூரு அல்லது திருவனந்தபுரம் வழியாக சுற்றிக்கொண்டு போக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் டிக்கெட் விலை, அதிக பயண நேரங்கள் ஏற்பட்டு பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் போதிய விமானங்கள் இல்லாமல் பயணிகள் கடும் அவதி1

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image மதுரையைச் சேர்ந்தவர் ஷேக் (26 வயது). இவர் சென்னை முகப்பேர் பகுதியில் தங்கி பிளம்பர் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் இருந்த ஷேக், முகப்பேர் பகுதியில் சாலையோரம் தங்கி இருந்த



Whatsaap Channel


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்