INDIAN 7

Tamil News & polling

பியூஷ் கோயல் இன்று சென்னை வருகிறார்: எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை

23 டிசம்பர் 2025 05:30 AM | views : 15
Nature

சென்னை,

தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பா.ஜனதா ஆயத்த வேலைகளை செய்து வருகிறது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் பா.ஜனதா தலைவர்களுடன் அடிக்கடி ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன.

இதற்கிடையில், தமிழக தேர்தல் பொறுப்பாளராக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டு உள்ளார். இணை பொறுப்பாளர்களாக சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி அர்ஜூன்ராம் மெக்வால், சிவில் விமான போக்குவரத்துத்துறை இணை மந்திரி முரளிதர் மொகல் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், தமிழக பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ் கோயல் இன்று (செவ்வாய்க்கிழமை) வருகை தருகிறார். தியாகராயகரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகளுடன் சட்டமன்ற தேர்தல் பணி குறித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டம் காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது.

இந்த கூட்டம் முடிந்தவுடன் அவர், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார். அப்போது அவர், கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பான பூர்வாங்க பேச்சுவார்த்தையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மத்திய மந்திரி பியூஷ் கோயலுக்கு தனது வீட்டில் எடப்பாடி பழனிசாமி விருந்து அளிக்கிறார். மாலை கவர்னர் ஆர்.என்.ரவி பியூஷ் கோயல் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image சென்னை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளுக்கு செயலாளர்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவி சாமுவேல் என்பவருக்கு வழங்கப்படவிருப்பதாக தகவல் வெளியானது. இதனால்

Image சென்னை, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்திருந்தார்.

Image சென்னை, சென்னையில் வேலைவாய்ப்பு, உயர்கல்வி, வணிகம், தொழில் ரீதியாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மக்கள் புலம்பெயர்ந்து வந்து வசித்து வருகின்றனர். இவ்வாறு சென்னையில் வசிக்கும் பிற மாவட்ட மக்கள் விழாக்காலங் களிலும்,

Image திமுக அரசு அளித்த வாக்​குறு​திப்​படி, பணி நிரந்​தரம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஐகோர்ட்டு உத்​தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு செய்த மேல்​முறையீட்டை கைவிட வேண்​டும் உள்​ளிட்ட

Image சென்னையில் எழுத்தாளர் ப.திருமாவேலன் எழுதிய 3 நூல்களை வெளியிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:- அரசியல் புரட்சியின் அடையாளமாக திமுக விளங்குகிறது. திராவிட மாடல் என்றாலே சிலருக்கு எரிகிறது. அவர்களுக்கு எரிய

Image தங்கம் விலை கடந்த 12-ந்தேதியில் இருந்து தாறுமாறாக ஏற்றம் கண்டது. கடந்த 15-ந்தேதி சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து இமாலய உச்சத்தை தொட்டு, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 120-க்கு விற்பனையானது. கடந்த சில நாட்களாக

Image திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தீபம் ஏற்ற காவல் துறை, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இது

Image சென்னையில் மெரினா கடற்கரை முக்கியமான பொழுதுபோக்கு தளமாக திகழ்கிறது. இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அனைத்து தரப்பட்ட மக்களும் மெரினா கடற்கரையை பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தும் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்