INDIAN 7

Tamil News & polling

ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் மறுப்பு. ஏன்?

03 ஜனவரி 2026 01:12 AM | views : 15
Nature

ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் மறுப்பு. ஏன்?
…………………………………………………………………………………………
விஜய்யை பாஜகவின் பி டீம் என்று பொய் பிரச்சாரம் செய்பவர்களுக்கு இந்த உண்மை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் ஜனநாயகன்களே…

விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தை தணிக்கைக்குழுவினர் பார்த்து பல நாட்களாகிவிட்டநிலையில், இன்னமும் அப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை. காரணம் சொல்லாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

படத்தில் எந்தவொரு காட்சிக்கும் கட் இல்லை, வசனங்களுக்கு ம்யூட் இல்லை. தவிர தணிக்கைக்குழு சொன்ன அறிவுறுத்தலின்படி சில மாற்றங்களும் செய்யப்பட்டுவிட்டன.

ஆனாலும் ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் இன்னமும் வழங்கவில்லை என்றால் என்ன அர்த்தம்?

சான்றிதழ் கேட்டு தொடர்புகொள்ளும் போதெல்லாம் கனத்த மௌனமே பதிலாக கிடைக்கிறது.

தன் கொள்கை எதிரி என்று ஒன்றிய பாஜக அரசை அடையாளம்காட்டினார் விஜய்.
அதற்கு பழிதீர்க்க தணிக்கைக்குழுவை பாஜக அரசு பகடைக்காயாக பயன்படுத்துகிறது.

தணிக்கை சான்றிதழை தாமதப்படுத்துவதன் மூலம் ஜனநாயகன் படம் திட்டமிட்டபடி ஜனவரி 9 அன்று வெளியாவதை தடுக்க நினைக்கிறதா பாஜக அரசு?

சூரிய வெளிச்சத்தை கைக்குட்டையால் மறைக்க முடியாது என்ற உண்மை இந்த மங்குனிகளுக்கு புரிவது எப்போது?

மக்கள் புரிய வைப்பார்கள்.
- ஜெ.பிஸ்மி, பத்திரிகையாளர்
- வலைப்பேச்சு

#JanaNayagan #JanaNayaganPongal #JanaNayaganFromJan9 #Thalapathy
@actorvijay @KvnProductions @anirudhofficial
@_mamithabaiju @Jagadishbliss @LohithNK01
@PttvNewsX @polimernews @News18TamilNadu @news7tamil @sathiyamnews @sunnewstamil @NewsTamilTV24x7 @JuniorVikatan @TamilTheHindu @behindwoods @igtamil @jbismi_offl @valaipechuvoice

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்