Tamil News & polling
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயணம் செய்து, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அடுத்தகட்டமாக, வருகிற 21-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 6 நாட்கள் மீண்டும் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
Also Readதவெகவில் விருப்ப மனுவைச் சமர்ப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்புஇது தொடர்பாக, அதிமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தொகுதி வாரியாக புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம் என்ற பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
Also Readபுதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடுஅதன் தொடர்ச்சியாக, 21-2-2026 முதல் 26-2-2026 வரை பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி, 21-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு ஆவடி, அம்பத்தூர் தொகுதிகளுக்கு அம்பத்தூரில் பிரசாரம் நடைபெறுகிறது. 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு மாதவரத்திலும், மாலை 5 மணிக்கு பொன்னேரியிலும் பிரசாரம் நடக்கிறது.
25-ந்தேதி (புதன்கிழமை) மதுரவாயல், பூந்தமல்லி தொகுதிகளுக்கு மாலை 5 மணிக்கு வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டப வளாகத்தில் பிரசாரம் நடக்கிறது. 26-ந்தேதி (வியாழக்கிழமை) தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளுக்கு மாலை 4.30 மணிக்கு பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் பிரசாரம் நடக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக BJP கனமழை தமிழக வெற்றிக் கழகம் TTV Dhinakaran Tamil Nadu எடப்பாடி பழனிசாமி திருமாவளவன் ADMK AIADMK AMMK மு.க.ஸ்டாலின் MK Stalin டிடிவி தினகரன் Thirumavalavan Anbumani Ramadoss அன்புமணி ராமதாஸ் செங்கோட்டையன் சீமான் PMK தமிழ்நாடு Edappadi Palaniswami Sengottaiyan Seeman பாமக முக ஸ்டாலின் சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை Congress Tamilaga Vettri Kazhagam Nellai உதயநிதி ஸ்டாலின் Thoothukudi நெல்லை தமிழகம் காங்கிரஸ்