Tamil News & polling
சி.பி.எஸ்.இ. கல்வி வாரியத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் 2 பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதில் முதலாவது பொதுத்தேர்வு இன்று (17-02-2026) தொடங்குகிறது. 2-வது பொதுத்தேர்வு மே 15-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது. தங்கள் மதிப்பெண்ணை அதிகரிக்க விரும்புபவர்களுக்காக இரண்டாவது தேர்வு வசதி செய்யப்பட்டு உள்ளது. அதேநேரம் முதலாவது பொதுத்தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும் என சி.பி.எஸ்.இ. கூறியுள்ளது.
இன்று 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணித பாடமும், 21-ந்தேதி ஆங்கிலமும், 25-ந்தேதி அறிவியலும், மார்ச் 2-ம் தேதி இந்தி தேர்வும், மார்ச் 7-ந்தேதி சமூக அறிவியல் பாட தேர்வும் நடைபெறுகிறது. சி.பி.எஸ்.இ., பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்று உடற்கல்வி தேர்வு, 20-ந் தேதி இயற்பியல், 28-ந்தேதி வேதியியல், மார்ச் 9-ந்தேதி கணிதம் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் இத்தேர்வினை எழுதுகிறார்கள்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ், “முதலாவது பொதுத்தேர்வு அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயம். இதில் வெற்றி பெறும், தகுதி வாய்ந்த மாணவர்கள் தங்கள் செயல்பாட்டை மேம்படுத்துவதற்காக அறிவியல், கணிதம், சமூக அறிவியல் மற்றும் மொழிப்பாடம் என ஏதாவது 3 பாடங்களில் 2-வது தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
முதலாவது பொதுத்தேர்வில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களை எழுதாத மாணவர்கள், 2-வது பொதுத்தேர்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் 'மீண்டும் கட்டாயம்' என்ற பிரிவுக்கு தள்ளப்பட்டு, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் பிரதான (முதலாவது பொதுத்தேர்வு) தேர்வில்தான் பங்கேற்க முடியும்” என்று கூறினார்.
தேர்வு பணிகளை கண்காணிக்க மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், உதவி மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுத வரும் மாணவர்கள் கட்டாயம் ஹால் டிக்கெட் கொண்டு வரவேண்டும். மொபைல் போன் கொண்டு வரக்கூடாது. தேர்வு அறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபடும் மாணவர்கள் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக்கல்வி இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக BJP கனமழை தமிழக வெற்றிக் கழகம் TTV Dhinakaran Tamil Nadu எடப்பாடி பழனிசாமி திருமாவளவன் ADMK AIADMK AMMK மு.க.ஸ்டாலின் MK Stalin டிடிவி தினகரன் Thirumavalavan Anbumani Ramadoss அன்புமணி ராமதாஸ் செங்கோட்டையன் சீமான் PMK தமிழ்நாடு Edappadi Palaniswami Sengottaiyan Seeman பாமக முக ஸ்டாலின் சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை Congress Tamilaga Vettri Kazhagam Nellai உதயநிதி ஸ்டாலின் Thoothukudi நெல்லை தமிழகம் காங்கிரஸ்