POLLING 📊 TN ELECTION 2026

 

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்

1 month ago 17 பிப்ரவரி 2026 01:53 AM | views : 215
சி.பி.எஸ்.இ. கல்வி வாரியத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் 2 பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதில் முதலாவது பொதுத்தேர்வு இன்று (17-02-2026) தொடங்குகிறது. 2-வது பொதுத்தேர்வு மே 15-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது. தங்கள் மதிப்பெண்ணை அதிகரிக்க விரும்புபவர்களுக்காக இரண்டாவது தேர்வு வசதி செய்யப்பட்டு உள்ளது. அதேநேரம் முதலாவது பொதுத்தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும் என சி.பி.எஸ்.இ. கூறியுள்ளது.

இன்று 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணித பாடமும், 21-ந்தேதி ஆங்கிலமும், 25-ந்தேதி அறிவியலும், மார்ச் 2-ம் தேதி இந்தி தேர்வும், மார்ச் 7-ந்தேதி சமூக அறிவியல் பாட தேர்வும் நடைபெறுகிறது. சி.பி.எஸ்.இ., பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்று உடற்கல்வி தேர்வு, 20-ந் தேதி இயற்பியல், 28-ந்தேதி வேதியியல், மார்ச் 9-ந்தேதி கணிதம் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் இத்தேர்வினை எழுதுகிறார்கள்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ், “முதலாவது பொதுத்தேர்வு அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயம். இதில் வெற்றி பெறும், தகுதி வாய்ந்த மாணவர்கள் தங்கள் செயல்பாட்டை மேம்படுத்துவதற்காக அறிவியல், கணிதம், சமூக அறிவியல் மற்றும் மொழிப்பாடம் என ஏதாவது 3 பாடங்களில் 2-வது தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

முதலாவது பொதுத்தேர்வில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களை எழுதாத மாணவர்கள், 2-வது பொதுத்தேர்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் 'மீண்டும் கட்டாயம்' என்ற பிரிவுக்கு தள்ளப்பட்டு, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் பிரதான (முதலாவது பொதுத்தேர்வு) தேர்வில்தான் பங்கேற்க முடியும்” என்று கூறினார்.

தேர்வு பணிகளை கண்காணிக்க மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், உதவி மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுத வரும் மாணவர்கள் கட்டாயம் ஹால் டிக்கெட் கொண்டு வரவேண்டும். மொபைல் போன் கொண்டு வரக்கூடாது. தேர்வு அறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபடும் மாணவர்கள் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக்கல்வி இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK திமுக விஜய் VIJAY அதிமுக சென்னை பாஜக BJP CHENNAI அண்ணாமலை TVK தவெக AMMK ANNAMALAI MK STALIN எடப்பாடி பழனிசாமி ADMK TAMIL NADU TTV DHINAKARAN AIADMK ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் முக ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் பாமக PMK தமிழக வெற்றிக் கழகம் தமிழகம் கைது ரஜினிகாந்த் கனமழை அன்புமணி ராமதாஸ் உதயநிதி ஸ்டாலின் CONGRESS சட்டசபை தேர்தல் காங்கிரஸ் PARLIAMENT ELECTION திருமாவளவன் UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM இந்திய அணி தமிழ்நாடு கொலை கோவை தீபாவளி COIMBATORE பிரதமர் மோடி சீமான் அமமுக தென்காசி AJITH KEERTHY SURESH EDAPPADI PALANISWAMI வடகிழக்கு பருவமழை TAMIL ACTRESS தேவர் நெல்லை NELLAI ASSEMBLY ELECTIONS TAMILAGA VETTRI KAZHAGAM THIRUMAVALAVAN திருப்பரங்குன்றம் PRIME MINISTER MODI தூத்துக்குடி அஜித் டாப் நியூஸ் ஓபிஎஸ் கொரோனா டிரெண்டிங் நடிகை MADURAI வன்னியர் பாலியல் தொல்லை CSK OPS மதுரை ELECTION COMMISSION கீர்த்தி சுரேஷ்