Tamil News & POLLING

 

விஜய்யுடன் கூட்டணி வைக்க எந்த முயற்சியும் வைக்கவில்லை: அமித்ஷா

2 hours ago 28 மார்ச் 2026 04:14 AM | views : 22

மத்திய உள்துறை மந்திரியும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா, டெல்லியில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அதில் அமித்ஷா கூறியதாவது: விஜய் கட்சியுடன் நாங்கள் எந்தவிதமான பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை.


இந்த கூட்டணிக்கு நாங்கள் முயற்சி செய்யவில்லை. ஏனென்றால் அவர் கூட்டணிக்கு வந்தால் எங்களின் வாக்கு வங்கியில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படலாம்” என்றார். விஜய்யை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கடந்த சில நாட்கள் முன்பு வரை தகவல் பரவிய நிலையில் இதனை அமித்ஷாவே தற்போது மறுத்துள்ளார்.


மேலும், அதிமுகவுடனான கூட்டணி குறித்து பேசிய அமித்ஷா, அதிமுகவுடனான கூட்டணியே எங்களுக்கு பலம் சேர்க்கிறது. இதனால் கூட்டணி கட்சிகளுடனான உறவு தமிழகத்தில் அவசியம். எனவே பாஜக, அதிமுகவுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதோடு, சிறிய பிராந்திய கட்சிகளையும் இணைத்து செயல்பட்டு வருகிறது.


தமிழகத்தில் திமுகவிற்கு எதிரான அலை வீசுகிறது. இதனால் தமிழகத்தில் வலுவான பெரும்பான்மையுடன் எங்களின் கூட்டணி ஆட்சி அமைக்கும்” என்றார்.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY சென்னை அதிமுக CHENNAI BJP பாஜக அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AMMK MK STALIN AIADMK TAMIL NADU ANBUMANI RAMADOSS TTV DHINAKARAN டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் ADMK PMK முக ஸ்டாலின் பாமக தமிழகம் தமிழக வெற்றிக் கழகம் அன்புமணி ராமதாஸ் காங்கிரஸ் ரஜினிகாந்த் உதயநிதி ஸ்டாலின் CONGRESS PARLIAMENT ELECTION கனமழை சீமான் தமிழ்நாடு EDAPPADI PALANISWAMI கோவை UDHAYANIDHI STALIN கொலை சட்டசபை தேர்தல் COIMBATORE அமமுக இந்திய அணி கைது KEERTHY SURESH பிரதமர் மோடி வடகிழக்கு பருவமழை தீபாவளி AJITH நெல்லை INDIAN CRICKET TEAM தென்காசி வன்னியர் TAMILAGA VETTRI KAZHAGAM TAMIL ACTRESS ASSEMBLY ELECTIONS திருமாவளவன் தேவர் விடுமுறை NELLAI டாப் நியூஸ் OPS NORTHEAST MONSOON SURIYA மதுரை கள்ளக்காதல் SEEMAN MADURAI CSK TAMIL CINEMA டிரெண்டிங் ஓபிஎஸ் கீர்த்தி சுரேஷ் நடிகை திருநெல்வேலி PRIME MINISTER MODI அஜித் கொரோனா THIRUMAVALAVAN திருப்பரங்குன்றம்