POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

கள்ளக்காதலை கண்டித்த கணவன்... கொன்று வீட்டிலேயே புதைத்த மனைவி...!

2 weeks ago 28 மார்ச் 2026 01:36 PM | views : 77

அமராவதி,

ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், ஹனிமிரெட்டி பள்ளியைச் சேர்ந்தவர் ஹனுமந்தராயுடு (வயது 43). இவருடைய மனைவி சுகன்யா. தம்பதிக்கு சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அம்ருதா என்ற மகளும், சந்தீப் என்ற மகனும் உள்ளனர். அவர்கள் சுமார் 15 ஆண்டுகளாக கல்யாண துர்கம் மண்டலத்திலுள்ள பழைய குளத்தில் வசித்து, ஆடுகளை மேய்த்து வருகின்றனர்.


இந்த நிலையில், சுகன்யாவுக்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. 3 மாதங்களுக்கு முன்பு, அவரது கணவர் ஹனுமந்தராயுடு கள்ளத்தொடர்வை கைவிடுமாறு கூறினார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சுகன்யா ஒரு பாறாங்கல்லால் கணவரை தாக்கினார். இதில் அவர் இறந்து விட்டார்.


கணவர் உடலை வீட்டின் பின்புறத்தில் சுகன்யா புதைத்தார். இடைநிலைப் பள்ளி படித்து வரும் அவரது மகள் அம்ருதா இதனை கண்டு பிடித்தார். யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவதாக தாய் மிரட்டியதால், அவள் அமைதியாக இருந்தாள். இந்த நிலையில், நேற்று தாய்க்கும் மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சுகன்யா தன் மகள் அம்ருதாவைக் கொல்ல முயன்றார்.

அம்ருதா தப்பித்து ஓடிவிட்டாள். அவள் தன் தந்தையின் சொந்த ஊரான ஹனிமிரெட்டிபள்ளிக்குச் சென்று, தன் உறவினர்களிடம் நடந்ததைப் பற்றிக் கூறினாள். இதற்கிடையே சுகன்யா கல்யாணதுர்கம் கிராமப்புற போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகன்யாவிடம் விசாரணை நடத்தினர். புதைக்கப்பட்ட அவரது கணவர் உடலை தோண்டி எடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை TVK பாஜக BJP AMMK ADMK தவெக ANNAMALAI எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS MK STALIN டிடிவி தினகரன் TAMIL NADU கனமழை மு.க.ஸ்டாலின் TTV DHINAKARAN பாமக PMK தமிழக வெற்றிக் கழகம் உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் அன்புமணி ராமதாஸ் AIADMK முக ஸ்டாலின் தமிழகம் கைது கோவை திருமாவளவன் காங்கிரஸ் ரஜினிகாந்த் இந்திய அணி INDIAN CRICKET TEAM தேவர் UDHAYANIDHI STALIN COIMBATORE சட்டசபை தேர்தல் CONGRESS வன்னியர் KEERTHY SURESH பிரதமர் மோடி கொலை EDAPPADI PALANISWAMI அமமுக வடகிழக்கு பருவமழை தீபாவளி NELLAI SURIYA நெல்லை TAMIL ACTRESS ஓபிஎஸ் சீமான் THIRUMAVALAVAN தமிழ்நாடு OPS AJITH தென்காசி PARLIAMENT ELECTION பாலியல் தொல்லை MADURAI மதுரை BIGG BOSS TAMIL PRIME MINISTER MODI திருப்பரங்குன்றம் அன்புமணி TAMILAGA VETTRI KAZHAGAM சூர்யா விடுமுறை ELECTION COMMISSION NORTHEAST MONSOON ASSEMBLY ELECTIONS கள்ளக்காதல் தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ் அஜித் தமிழக சட்டசபை தேர்தல் CSK