POLLING 📊 TN ELECTION 2026

 

போரை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் திட்டம்- ஐரோப்பிய நாடுகள் உதவிக்கரம் நீட்டாததால் விரக்தி

1 hour ago 01 ஏப்ரல் 2026 04:12 AM | views : 27

வாஷிங்டன்:

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் ஈரான் போர் ஒருமாதமாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா ஒருபக்கம் அமைதி பேச்சுவார்த்தையுடன் கூடிய தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.

மறுபக்கம் ஈரானின் முக்கிய நகரங்களை குறிவைத்து இஸ்ரேல் தாறுமாறாக தாக்கி வருகிறது. இது ஒருபுறம் இருக்க பாகிஸ்தான் தலைமையில் சீனா, சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட நாடுகள் அமைதி பேச்சு வார்த்தை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

ஆனாலும் முடிவு எட்டபடாமல் போர் தாக்குதல் 5-வது வாரமாக தொடர்கிறது. ஈரானின் முக்கியமான கார்க் தீவை கைப்பற்றி அதன் பொருளாதாரத்தை முடக்க அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. இதற்காக தனது ராணுவ வீரர்களை வளைகுடா நாடுகளில் உள்ள போர் தளங்களில் அமெரிக்கா களம் இறக்கியுள்ளது.

இதற்கிடையே ஈரான் உடனான போரில் உதவ மறுத்த நட்பு நாடுகளுக்கு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். ஏற்கனவே ஸ்பெயின், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் போரில் அமெரிக்காவுக்கு உதவ மறுத்துள்ள நிலையில் பிரான்சும் தங்களுடைய வான்பரப்பை போருக்கு பயன்படுத்த அமெரிக்காவுக்கு தடைவிதித்துள்ளது.

போரில் உதவ முன்வராத ஐரோப்பிய நாடுகள் தற்போது விமான எரிபொருள் இன்றி தவிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப். இரண்டு யோசனைகளை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக விமான எரிபொருள் கிடைக்காமல் தவிக்கும் அனைத்து நாடுகளுக்கும், குறிப்பாக ஈரான் தலைமையை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட மறுத்த இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு நான் ஓர் யோசனையை முன்வைக்கிறேன்" என்றார்.

மேலும் அவர். "ஒன்று. நீங்கள் எரிபொருளை அமெரிக்காவிடம் இருந்து வாங்குங்கள். இரண்டாவது, ஹார்முஸ் நீரிணைக்கு சென்று அதை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். அமெரிக்கா இனி உங்களுக்கு உதவ அங்கே இருக்காது. சரியாகச் சொல்வதாக இருந்தால், எங்களுக்குத் தேவைப்பட்டபோது நீங்கள் எங்களுக்கு உதவ வராதது போல நாங்களும் உங்களுக்கு உதவ வர மாட்டோம்.

எனினும், ஈரான் முழுமையாகவே அழிக்கப்பட்டுவிட்டது. கடினமான பகுதி முடிந்துவிட்டது. எனவே, ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்று உங்களுக்குச் சொந்தமான எண்ணெயை நீங்களே பெற்றுக்கொள்ளுங்கள்" என தெரிவித்துள்ளார்.

ராணுவத் தளவாடங்கள் நிரம்பிய விமானங்கள் பறக்க தங்கள் வான் எல்லையை அனுமதிக்காத பிரான்ஸ் நாட்டையும் டிரம்ப் விமர்சித்துள்ளார்.

இந்தநிலையில் ஹார்முசை திறக்காமலேயே இந்த போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

ஈரானின் கடற்படை மற்றும் ஏவுகணை இருப்புகளை முடக்குவது, தற்போதைய பகைமைகளை முடிவுக்குக் கொண்டுவருவது ஆகிய தனது முக்கிய இலக்குகளை அமெரிக்கா அடைய வேண்டும் என்றும், அதே நேரத்தில் தடையற்ற வர்த்தகப் பரிமாற்றத்தை மீண்டும் தொடங்குமாறு தெஹ்ரானுக்கு ராஜதந்திர ரீதியாக அழுத்தம் கொடுத்து போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் முடிவு செய்துள்ளார் என தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய நாடுகள் உதவ மறுப்பு தெரிவித்துள்ளநிலையில் இதற்காக வளைகுடா நாடுகளின் ராணுவ உதவியை டிரம்ப் நாடுவார் என தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லேவிட், "போரில் வளைகுடா நாடுகளின் ராணுவத்தினர் நேரடியாக ஈடுபட பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இதுகுறித்து நான் பேசக்கூடாது. டிரம்ப் ஏற்கனவே முடிவு செய்துவிட்டார்” என்றார்.

துபாய் துறைமுகத்தில் பெட்ரோலிய எண்ணெய் முழுவதும் நிரப்பப்பட்டு அல் சல்மி என்ற குவைத் நாட்டின் டேங்கர் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த கப்பல் மீது ஈரான் கடல்சார் குரூஸ் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது.இதனால் அந்த கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தாக்குதல் காரணமாக அந்த கப்பல் சேதமடைந்துள்ளதாக குவைத் பெட்ரோலிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஈரானில் இருந்து மருத்துவ உதவி பொருட்கள் வேண்டி இந்தியாவுக்கு புறப்பட இருந்த விமானத்தை அமெரிக்கா ராணுவம் குண்டுவீசி தகர்த்ததாக ஈரான் புகார் தெரிவித்துள்ளது.

மேலும் ஈரானின் இஸ்பஹான் நகரம் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. அங்குள்ள ஆயுத கிடங்கை 900 கிலோ சக்திவாய்ந்த 'பங்கர் பஸ்டர்' குண்டுகளை வைத்து தகர்த்தது. தலைநகர் தெஹ்ரானை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அந்த நாட்டின் ராணுவ தளபதி ஜெம்ஷித் எசாகனி குடும்பத்துடன் உயிரிழந்தார்.

போரை முடிவுக்கு கொண்ட வர சீனாவுடன் இணைந்து பாகிஸ்தான் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே ஹார்முஸ் நீரிணையை கடந்து செல்ல கப்பல்களுக்கு ரூ.18 கோடி (2 மில்லியன் டாலர்கள்) கட்டணம் வசூலிக்கப்படுவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து ஈரான் நிறைவேற்றியது.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை பாஜக BJP CHENNAI அண்ணாமலை TVK AMMK தவெக ANNAMALAI TTV DHINAKARAN MK STALIN TAMIL NADU ADMK எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் AIADMK தமிழகம் PMK உதயநிதி ஸ்டாலின் பாமக முக ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் அன்புமணி ராமதாஸ் காங்கிரஸ் மு.க.ஸ்டாலின் கனமழை ரஜினிகாந்த் கைது CONGRESS கோவை PARLIAMENT ELECTION கொலை சட்டசபை தேர்தல் தமிழ்நாடு சீமான் திருமாவளவன் UDHAYANIDHI STALIN AJITH COIMBATORE தீபாவளி பிரதமர் மோடி வடகிழக்கு பருவமழை இந்திய அணி KEERTHY SURESH அமமுக EDAPPADI PALANISWAMI INDIAN CRICKET TEAM வன்னியர் தேவர் TAMILAGA VETTRI KAZHAGAM TAMIL ACTRESS ASSEMBLY ELECTIONS OPS NELLAI நெல்லை தென்காசி THIRUMAVALAVAN நடிகை கீர்த்தி சுரேஷ் பாலியல் தொல்லை CSK திருப்பரங்குன்றம் SURIYA விடுமுறை ஓபிஎஸ் கொரோனா SEEMAN தூத்துக்குடி NORTHEAST MONSOON இந்தியா அஜித் டிரெண்டிங் ELECTION COMMISSION MADURAI மதுரை PRIME MINISTER MODI டாப் நியூஸ்