POLLING 📊 TN ELECTION 2026

 

விஜய் வருகையால் பாதிப்பு இல்லை: 100% திமுக வெற்றி உறுதி - சபரீசன்

1 hour ago 02 ஏப்ரல் 2026 04:39 PM | views : 30

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் வருகையால் எந்தவித பாதிப்பும் இல்லை; மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி 100% உறுதியாகியுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் இன்று (ஏப். 2) தெரிவித்தார். சென்னையில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனுக்கு ஆதரவாக வில்லிவாக்கம் நலச் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் சபரீசன், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய சபரீசன், ''நாங்கள் மிகச்சிறந்த திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.


புதிய கட்சியால் (தவெக) எவ்வித பாதிப்பும் இல்லை'' எனத் தெரிவித்தார்.தவெக தலைவர் விஜய் இரண்டு தொகுதியில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ''அது அவரின் நம்பிக்கையின் அளவைக் காட்டுகிறது'' எனக் குறிப்பிட்டார். ''நாங்கள் செயல்படுத்திய திட்டங்கள் மீண்டும் 100% வெற்றியை அளிக்கும். எங்கள் தேர்தல் வாக்குறுதிகள் வெற்றியை உறுதி செய்யும். திமுக கூட்டணிக் கட்சிகளின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது'' என சுட்டிக்காட்டினார்.



இதனைத் தொடர்ந்து சேகர்பாபு பேசியதாவது:''திமுக வெற்றி உறுதி செய்யப்பட்ட வெற்றி. இதைத் தடுக்கின்ற சக்தி யாருக்கும் இல்லை. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டுள்ளன. வடசென்னை வளர்ச்சித் திட்டம் பெயரில் 60% பணிகள் நிறைவேற்றியுள்ளோம். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி வந்தால்தான் வளர்ச்சி சாத்தியம் என்பதால் சென்னை தொகுதிகளில் திமுகவுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்'' எனக் குறிப்பிட்டார்..


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை பாஜக BJP CHENNAI அண்ணாமலை TVK தவெக AMMK ANNAMALAI MK STALIN எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS TTV DHINAKARAN ADMK டிடிவி தினகரன் TAMIL NADU மு.க.ஸ்டாலின் AIADMK தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் பாமக PMK தமிழகம் கனமழை பாராளுமன்ற தேர்தல் உதயநிதி ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் காங்கிரஸ் கைது சட்டசபை தேர்தல் CONGRESS சீமான் தமிழ்நாடு PARLIAMENT ELECTION UDHAYANIDHI STALIN கோவை திருமாவளவன் கொலை AJITH EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH இந்திய அணி தென்காசி தீபாவளி அமமுக COIMBATORE பிரதமர் மோடி வடகிழக்கு பருவமழை NELLAI வன்னியர் தேவர் கொரோனா OPS ASSEMBLY ELECTIONS நெல்லை TAMILAGA VETTRI KAZHAGAM INDIAN CRICKET TEAM TAMIL ACTRESS THIRUMAVALAVAN CSK விடுமுறை ஓபிஎஸ் திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ் மதுரை ELECTION COMMISSION RAJINIKANTH SURIYA தூத்துக்குடி அஜித் டாப் நியூஸ் நடிகை பாலியல் தொல்லை PRIME MINISTER MODI இந்தியா SEEMAN டிரெண்டிங் MADURAI NORTHEAST MONSOON