POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

நெல்லையில் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

1 week ago 03 ஏப்ரல் 2026 07:22 AM | views : 84

தமிழக சட்டசபைக்கு வருகிற 23-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பிரதான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் முதல்கட்ட பிரசாரத்தை திருவாரூரில் தொடங்கி திருச்சியில் முடித்தார்.

தொடர்ந்து 2-ம் கட்ட பிரசாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லையில் இருந்து இன்று தொடங்குகிறார். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 4.50 மணிக்கு தூத்துக்குடி வருகிறார். பின்னர் அங்கிருந்து காரில் நெல்லைக்கு வருகிறார்.

நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

தி.மு.க. வேட்பாளர்களான அப்துல் வகாப் எம்.எல்.ஏ. (பாளையங்கோட்டை), சுப்பிரமணியன் (நெல்லை), சபாநாயகர் அப்பாவு (ராதாபுரம்) காங்கிரஸ் சார்பில் நாங்குநேரி, அம்பை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ., நெல்லை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் ஆவுடையப்பன், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கிரகாம்பெல் ஆகியோர் செய்துள்ளனர்.

கூட்டம் முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு செல்கிறார். இரவில் அங்கு தங்கும் அவர் மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மதியம் நெல்லைக்கு வருகிறார். வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் மதிய உணவுக்கு பிறகு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு மாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு செல்கிறார்.

அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்களான மனோஜ் பாண்டியன் (ஆலங்குளம்), ராஜா எம்.எல்.ஏ. (வாசுதேவநல்லூர்), கலை கதிரவன் (தென்காசி), கூட்டணி கட்சியான ம.தி.மு.க. வேட்பாளர் ராஜேந்திரன் (கடையநல்லூர்), சங்கரன்கோவில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார். பின்னர் விருதுநகர் மாவட்டத்தில் பிரசாரத்திற்காக செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துலுக்கர் பட்டி ராம்கோ சிமெண்ட்ஸ் விருந்தினர் இல்லத்தில் இரவு தங்குகிறார்.

மறுநாள்(5-ந் தேதி) காலை விருதுநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை TVK பாஜக BJP AMMK ADMK ANNAMALAI தவெக ANBUMANI RAMADOSS MK STALIN TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி கனமழை உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரன் தமிழக வெற்றிக் கழகம் PMK பாமக முக ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் AIADMK அன்புமணி ராமதாஸ் கைது இந்திய அணி UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் காங்கிரஸ் கோவை தமிழகம் தேவர் சட்டசபை தேர்தல் CONGRESS INDIAN CRICKET TEAM COIMBATORE திருமாவளவன் KEERTHY SURESH கொலை வடகிழக்கு பருவமழை வன்னியர் பிரதமர் மோடி அமமுக EDAPPADI PALANISWAMI SURIYA AJITH தென்காசி NELLAI தமிழ்நாடு நெல்லை சீமான் தீபாவளி OPS TAMIL ACTRESS PARLIAMENT ELECTION ஓபிஎஸ் கள்ளக்காதல் மதுரை MADURAI விடுமுறை CSK TAMILAGA VETTRI KAZHAGAM PRIME MINISTER MODI தமிழக சட்டசபை தேர்தல் சூர்யா தூத்துக்குடி பாலியல் தொல்லை அன்புமணி NORTHEAST MONSOON திருப்பரங்குன்றம் அஜித் கீர்த்தி சுரேஷ் THIRUMAVALAVAN ASSEMBLY ELECTIONS ELECTION COMMISSION BIGG BOSS TAMIL