POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

புதுச்சேரியில் இன்று தவெக தலைவர் விஜய் பிரசாரம்

1 week ago 04 ஏப்ரல் 2026 01:25 AM | views : 128

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 சட்டசபை தொகு திகளுக்கு வாக்குப்பதிவு வருகிற 9-ந் தேதி நடைபெற உள்ளது. மே 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.


களத்தில் 294 வேட்பாளர்கள் உள்ளனர். அவர்கள் தொகுதிவாரியாக சூறாவளியாக சென்று ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் நாள் நெருங்கி விட்டதால் முக்கிய தலைவர்கள் புதுவையை நோக்கி வந்து பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் புதுச்சேரியில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். இது குறித்து தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

இன்று (04.04.2026, சனிக்கிழமை) புதுச்சேரி மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 11 மணி வரை தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி பகுதியிலும், 11 மணி முதல் 12 மணி வரை கடலூர் சாலை மால் அருகிலும், 12 மணி முதல் 01 மணி வரை தவளக்குப்பம் ஜங்ஷன் பகுதியிலும் கழகத் தலைவர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.


இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பிரசார நிகழ்வுகளில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவரின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் அறவே பின்தொடரக் கூடாது.

தேர்தல் ஆணையம் விதித்துள்ள நிபந்தனைகளின்படி, கழகத் தலைவரின் பிரசாரத்தில் கலந்துகொள்ள 5 ஆயிரம் பேருக்கு மேல் அனுமதி இல்லை.

அத்துடன் இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை TVK பாஜக BJP AMMK ADMK தவெக ANNAMALAI எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS MK STALIN டிடிவி தினகரன் TAMIL NADU கனமழை மு.க.ஸ்டாலின் TTV DHINAKARAN பாமக PMK தமிழக வெற்றிக் கழகம் உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் அன்புமணி ராமதாஸ் AIADMK முக ஸ்டாலின் தமிழகம் கைது கோவை திருமாவளவன் காங்கிரஸ் ரஜினிகாந்த் இந்திய அணி INDIAN CRICKET TEAM தேவர் UDHAYANIDHI STALIN COIMBATORE சட்டசபை தேர்தல் CONGRESS வன்னியர் KEERTHY SURESH பிரதமர் மோடி கொலை EDAPPADI PALANISWAMI அமமுக வடகிழக்கு பருவமழை தீபாவளி NELLAI SURIYA நெல்லை TAMIL ACTRESS ஓபிஎஸ் சீமான் THIRUMAVALAVAN தமிழ்நாடு OPS AJITH தென்காசி PARLIAMENT ELECTION பாலியல் தொல்லை MADURAI மதுரை BIGG BOSS TAMIL PRIME MINISTER MODI திருப்பரங்குன்றம் அன்புமணி TAMILAGA VETTRI KAZHAGAM சூர்யா விடுமுறை ELECTION COMMISSION NORTHEAST MONSOON ASSEMBLY ELECTIONS கள்ளக்காதல் தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ் அஜித் தமிழக சட்டசபை தேர்தல் CSK