விஜயகாந்தை போல விஜயும் தாக்கத்தை ஏற்படுத்துவார் - டி.டி.வி.தினகரன்

மதுரை:


மதுரையில் அ.ம.மு.க. தலைவர் டி.டி.வி.தினகரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-


வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சியை மக்கள் முடிவுக்கு கொண்டு வருவார்கள். பா.ஜ.க.வை விமர்சித்து தி.மு.க. சிறுபான்மையினர் வாக்குகளை பெற முயற்சிக்கிறது.


இந்த தேர்தலில் அ.தி.மு.க. தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். சசிகலா, ராமதாஸ் கூட்டணியால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்தை போல விஜயும் தாக்கத்தை ஏற்படுத்துவார். அவரது வருகை தி.மு.க.விற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.


பா.ஜ.க.வில் அண்ணாமலை போட்டியிடாததற்கு எந்த அழுத்தமும் இல்லை என நினைக்கிறேன். அவரது தொடர்பான யூகங்கள், வதந்திகள் பெரிதாக்கப்படுகிறது. அது முற்றிலும் பொய். வெளி நாட்டு பங்களிப்பு சட்டம் பற்றி அச்சம் தேவையில்லை.


இவ்வாறு அவர் கூறினார்.

பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel