POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

என் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன் - குஷ்பு பேட்டி

1 week ago 04 ஏப்ரல் 2026 05:22 PM | views : 111

மதுரை,

அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக இயக்குநர் சுந்தர்.சி அறிவிக்கப்பட்டார். அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின்போது சுந்தர்.சியின் மனைவி குஷ்புவும் உடன் இருந்தார்.

இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது


அவர் பேசியதாவது;-

“இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், தி.மு.க.விற்கும் இடையில்தான் போட்டி. த.வெ.க. தலைவர் விஜய், இப்போதுதான் களத்திற்கு வந்திருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகளை கூறியிருக்கிறேன். தேர்தலில் அவரது தாக்கம் குறித்து மே 4-ந்தேதிக்கு பிறகு பேசுவதுதான் சரியாக இருக்கும்.


விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் குறித்து பேசுவதற்கு நான் ஒன்றும் அவரது செய்தி தொடர்பாளர் கிடையாது. அவர் என் தம்பிதான். ஏற்கனவே எனது கணவர் சுந்தர்.சியிடம் விஜய் பற்றி கேட்டபோது, விஜய் பற்றி விமர்சிக்கப் போவதில்லை என்று கூறினார். நானும் என் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்.”

இவ்வாறு குஷ்பு தெரிவித்தார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை TVK பாஜக BJP AMMK ADMK ANNAMALAI தவெக ANBUMANI RAMADOSS MK STALIN TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி கனமழை உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரன் தமிழக வெற்றிக் கழகம் PMK பாமக முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் பாராளுமன்ற தேர்தல் AIADMK UDHAYANIDHI STALIN இந்திய அணி கைது ரஜினிகாந்த் காங்கிரஸ் கோவை தமிழகம் COIMBATORE திருமாவளவன் சட்டசபை தேர்தல் தேவர் CONGRESS INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI பிரதமர் மோடி வன்னியர் வடகிழக்கு பருவமழை KEERTHY SURESH கொலை அமமுக சீமான் SURIYA ஓபிஎஸ் தென்காசி AJITH PARLIAMENT ELECTION NELLAI TAMIL ACTRESS தமிழ்நாடு OPS நெல்லை தீபாவளி கள்ளக்காதல் விடுமுறை MADURAI மதுரை CSK TAMILAGA VETTRI KAZHAGAM PRIME MINISTER MODI தமிழக சட்டசபை தேர்தல் சூர்யா தூத்துக்குடி பாலியல் தொல்லை அன்புமணி NORTHEAST MONSOON திருப்பரங்குன்றம் அஜித் கீர்த்தி சுரேஷ் THIRUMAVALAVAN ASSEMBLY ELECTIONS ELECTION COMMISSION BIGG BOSS TAMIL