POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு

1 week ago 06 ஏப்ரல் 2026 02:03 AM | views : 83

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டில் விசாரணைக்காக அங்கு உள்ள போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த சமயத்தில் அவர்கள் இருவரும் இறந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 9 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த இரட்டைக் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடக்கிறது. தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என கடந்த 23-ந்தேதி நீதிபதி முத்துகுமரன் தீர்ப்பளித்தார். அவர்களுக்கான தண்டனை விவரம் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.


அதன்படி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள 9 போலீஸ்காரர்களும் இன்று காலை 10.30 மணி அளவில் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்படுவார்கள் என கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர்களுக்கு என்னென்ன தண்டனை என்பது அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை TVK பாஜக BJP AMMK ADMK தவெக ANNAMALAI எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS MK STALIN டிடிவி தினகரன் TAMIL NADU கனமழை மு.க.ஸ்டாலின் TTV DHINAKARAN பாமக PMK தமிழக வெற்றிக் கழகம் உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் அன்புமணி ராமதாஸ் AIADMK முக ஸ்டாலின் தமிழகம் கைது கோவை திருமாவளவன் காங்கிரஸ் ரஜினிகாந்த் இந்திய அணி INDIAN CRICKET TEAM தேவர் UDHAYANIDHI STALIN COIMBATORE சட்டசபை தேர்தல் CONGRESS வன்னியர் KEERTHY SURESH பிரதமர் மோடி கொலை EDAPPADI PALANISWAMI அமமுக வடகிழக்கு பருவமழை தீபாவளி NELLAI SURIYA நெல்லை TAMIL ACTRESS ஓபிஎஸ் சீமான் THIRUMAVALAVAN தமிழ்நாடு OPS AJITH தென்காசி PARLIAMENT ELECTION பாலியல் தொல்லை MADURAI மதுரை BIGG BOSS TAMIL PRIME MINISTER MODI திருப்பரங்குன்றம் அன்புமணி TAMILAGA VETTRI KAZHAGAM சூர்யா விடுமுறை ELECTION COMMISSION NORTHEAST MONSOON ASSEMBLY ELECTIONS கள்ளக்காதல் தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ் அஜித் தமிழக சட்டசபை தேர்தல் CSK