POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

சென்னை போரூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை சுபாஷினி தூக்கிட்டு தற்கொலை

1 week ago 06 ஏப்ரல் 2026 05:32 AM | views : 180

சென்னை போரூர் அருகே உள்ள பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடிகை சுபாஷினி வசித்துவந்தார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர் படப்பிடிப்பு காரணமாக அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்து தங்கியுள்ளார். அங்கிருந்தபடி ஷூட்டிங்கிற்கு சென்று வந்த சுபாஷினி நேற்று இரவு திடீரென தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.


நடிகை தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நடிகை சுபாஷினி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.


முதல் கட்ட விசாரணையில் கணவருடன் வீடியோ காலில் பேசிய பிறகு அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், குடும்பத்தகராறு காரணமாக ஏற்பட்ட மனஉளைச்சலில் இந்த விபரீத முடிவை எடுத்தாரா? என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.



பெங்களூரில் கணவருடன் வசித்து வந்த நடிகை சுபாஷினி ஷூட்டிங்கிற்காக வந்த இடத்தில் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சுபாஷினி ‘கயல்’ என்ற சின்னத்திரை தொடரில் நடித்து வந்தார். திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாக இருந்த சுபாஷினி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது ரசிகர்களை சோகம் அடைய வைத்துள்ளது.


மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை TVK பாஜக BJP AMMK ADMK தவெக ANNAMALAI எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS MK STALIN டிடிவி தினகரன் TAMIL NADU கனமழை மு.க.ஸ்டாலின் TTV DHINAKARAN பாமக PMK தமிழக வெற்றிக் கழகம் உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் அன்புமணி ராமதாஸ் AIADMK முக ஸ்டாலின் தமிழகம் கைது கோவை திருமாவளவன் காங்கிரஸ் இந்திய அணி ரஜினிகாந்த் தேவர் CONGRESS சட்டசபை தேர்தல் INDIAN CRICKET TEAM COIMBATORE UDHAYANIDHI STALIN வன்னியர் KEERTHY SURESH கொலை வடகிழக்கு பருவமழை பிரதமர் மோடி அமமுக EDAPPADI PALANISWAMI சீமான் NELLAI SURIYA தீபாவளி AJITH PARLIAMENT ELECTION ஓபிஎஸ் தென்காசி OPS THIRUMAVALAVAN நெல்லை TAMIL ACTRESS தமிழ்நாடு திருப்பரங்குன்றம் BIGG BOSS TAMIL PRIME MINISTER MODI பாலியல் தொல்லை TAMILAGA VETTRI KAZHAGAM அன்புமணி அஜித் விடுமுறை தமிழக சட்டசபை தேர்தல் தூத்துக்குடி MADURAI சூர்யா CSK மதுரை கீர்த்தி சுரேஷ் கள்ளக்காதல் ASSEMBLY ELECTIONS NORTHEAST MONSOON ELECTION COMMISSION