POLLING FLAMES 📊 TN ELECTION 2026
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான வேலுமணி உள்ளிட்ட என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,
“நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது, நீண்ட காலமாக பெண்கள் வைத்துவரும் கோரிக்கை. ஜெயலலிதா உள்ளாட்சியில் 33% என்பதை 50% ஆக உயர்த்தினார். நான் எம்பியாக இருந்தபோது 1998ல் நாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33%இடஒதுக்கீடு வேண்டும் என்று மசோதா கொண்டுவந்தார்கள்.
ஜெயலலிதா இருந்த காலத்தில் கூட்டணியில் இருந்தோம், வாஜ்பாய் பிரதமராக இருந்தார், சட்டத்துறை அமைச்சராக தம்பிதுரை மசோதாவை படிக்கும்போது முலாயம் சிங் யாதவ் புடுங்கி கிழித்தெறிந்தார்.
அப்போது நின்றுவிட்டதை, பிரதமர் மோடி இப்போது நிறைவேற்றி இருக்கார். நாடாளுமன்ற தொகுதி வரையறை பற்றி ஸ்டாலின் வேண்டுமென்றே எண்ணிக்கை குறையும்
என்று அவதூறு கருத்து சொல்கிறார். வீடு வீடாக கருப்புக் கொடி கட்டச்சொன்னார், எந்த ஒரு கருப்புக் கொடியும் கண்ணுக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர் பேசுவது பொய். ஸ்டாலினால் பதில் கருத்து சொல்லமுடியலை.
தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் போட்டி என்கிறார் ஸ்டாலின். இப்போது நடப்பது சட்டமன்றத் தேர்தல். மேட்டுப்பாளையம் மக்களுக்குத் தெரியும் விஷயம் கூட முதலமைச்சருக்கு தெரியவில்லை. திமுகவை அகற்றும் தேர்தல் இது. இதனால்தான் பாஜகவுடன் கூட்டணி வைத்தோம், மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றும் கூட்டணி. திமுக ஆட்சியின் 5 ஆண்டில் மேட்டுப்பாளையத்துக்கு ஏதாவது செய்தார்களா? இங்கு கட்டிய பாலம் அனைத்தும் நாம் தான் கட்டினோம். ஒரே ஒரு பாலம் தான் அவர் கட்டினார், அதுவும் பாதியில்
நிற்கிறது. கோவை மாவட்டத்தில் அதிக பாலங்கள் கட்டினோம்.” என தெரிவித்தார்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள« முந்தைய செய்தி (Previous)
மகளிருக்கு மாதம் ரூ.2,500; மீனவர்களுக்கு நிரந்த வீடு; ஏஐ அமைச்சகம்...உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்: