தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு குளிர்பானம் குடித்த தாய், மகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்ப நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் லாரி டிரைவராக உள்ளார். இவரது மனைவி கற்பகவல்லி(34). இந்த தம்பதிக்கு சண்முகபாண்டி (8) என்ற மகனும், தர்ஷினி (7) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு கற்பகவல்லி தனது மகளுடன் அப்பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்று சிக்கன்கிரேவி வாங்கி வந்து, வீட்டில் தயார் செய்து வைத்திருந்த உணவுடன் வைத்து சாப்பிட்டுள்ளனர்.
அப்போது லேசான வயிர் எரிச்சல் இருந்த காரணத்தினால் அருகில் உள்ள பெட்டிக்கடைக்கு சென்று 10 ரூபாய்க்கு குளிர்பானம் வாங்கி கற்பகவல்லி மற்றும் அவரது மகள் தர்ஷினி இருவரும் அருந்தியுள்ளனர். குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் இருவருக்கும் வாந்தி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையெடுத்து உறவினர்கள் இருவரையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்க முயற்சி எடுத்தனர். ஆனால் அதற்குள்ளாக சிகிச்சை பலன் இல்லமால் தாய், மகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று இருவர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுமதித்தனர்.
மேலும் கோவில்பட்டி டி.எஸ்.பி. உதயசூரியன், ஆய்வாளர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் கற்பகம் வீடு, குளிர்பானம் மற்றும் கிரேவி வாங்கிய கடையில் விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் சாப்பிட்ட சாப்பாடு மற்றும் குளிர்பானம் பாட்டில் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து சோதனை செய்ய அனுப்பி வைத்துள்ளனர்.
சிக்கன் கிரேவி சாப்பிட்டு, குளிர்பானம் குடித்த தாய், மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. உடற்கூறாய்வுக்கு பின்னர் கிரேவி சாப்பிட்டதால் உயிரிழந்தனரா அல்லது இறப்புக்கு குளிர்பானம் காரணமா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?
100-லிருந்து 10-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?
தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?
செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு
தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!
அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா செங்கோட்டையன்?
டாஸ்மாக் பணியாளர்களுக்கு எதிரான தி.மு.க. அரசின் அடக்குமுறை கண்டனத்திற்குரியது - டி.டி.வி.தினகரன்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!