பிக் பாஸ் தமிழ் சீசன் கடந்த ஆண்டை போல தாமதமாக அக்டோபர் மாதம் ஆரம்பமான நிலையில், இந்த சீசனிலும் ஏகப்பட்ட பண்டிகை கொண்டாட்டம் தான் அரங்கேறும் என ரசிகர்கள் அப்செட்டாகி இருந்த நிலையில், அதிலும் ஒரு சின்ன ட்விஸ்ட் கொடுத்து ஏதோ புதுசா கொளுத்திப் போட பிக்பாஸ் திட்டமிட்டுள்ள முதல் புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
பிக் பாஸின் மைண்ட் வாய்ஸை அழகாக கேட்ச் செய்த பிரியங்கா பிக் பாஸை பங்கமாக கலாய்க்கும் இன்றைய முதல் புரமோ லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறது.
பிக் பாஸ் போட்டியாளர்கள் எல்லாம் இன்றைக்கு போடப் போகும் நாடகம் எப்படி இருக்கப் போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
போன சீசனில் அர்ச்சனா, சுரேஷ் சக்கரவர்த்தி எல்லாம் அழகாக பர்ஃபார்மன்ஸ் பண்ணி அசத்திய நிலையில், இந்த சீசன் விஜயதசமி கொண்டாட்டம் எப்படி இருக்கப் போகிறது என்பதையும் கம்பேர் பண்ணி கருத்து சொல்ல ரசிகர்கள் ஆர்வமுடன் வெயிட்டிங்.
ஒற்றை கண் கேமரா மூலம் பிக் பாஸ் போட்டியாளர்களை 24 மணி நேரமும் கண்காணித்துக் கொண்டிருக்கும் பிக் பாஸை "விஜயதசமி அதுவுமா புதுசா கொளுத்திப்போடுவேன்னு நினைச்சி கூட பார்க்கல ஒரு கண்ணா" என பிரியங்கா பங்கமாக வச்சி செய்துள்ள முதல் புரமோ தற்போது வெளியாகி ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தி உள்ளது.
குருநாதா, பிக் பாஸ், வாத்தியாரே என மரியாதையுடன் அழைக்கப்பட்டு வந்த பிக் பாஸை இந்த சீசனில் பிரியங்கா கொஞ்சம் கூட மரியாதையே கொடுக்காமல் நைட்டி திருடன், பெரிய பாசு மற்றும் ஒரு கண்ணா என நக்கலடித்து வருவது பல ரசிகர்களுக்கு பிடிக்க வில்லை என்றாலும் புதுசா இருக்கே என ரசித்து வருகின்றனர். சிலர் பிரியங்காவின் அடாவடிக்கு எதிராகவும் கமெண்ட்டுகளை போட்டு திட்டி வருகின்றனர்.
தாமரை செல்வி தலைமையில் ராஜுவின் கை வண்ணத்தில் உருவாகப் போகும் விஜயதசமி நாடகத்தில் ஒவ்வொரு போட்டியாளர்களும் எப்படி ஃபேன்ஸி டிரெஸ் காம்பெடிஷனில் கலந்து கொண்ட குழந்தைகள் போல சொதப்போ போறாங்களா? இல்லை கடந்த சீசனில் அர்ச்சனா, சுரேஷ் சக்கரவர்த்தி கலக்கியது போல நடிப்பில் மிரட்டப் போறாங்களா என்பதை காத்திருந்து பார்ப்போம்.
அபிஷேக் ராஜா அண்ணாச்சியை ஏற்கனவே மரியாதை குறைவாக பேசுகிறார் என்கிற குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் கிளம்பி வரும் நிலையில், புரமோவின் இறுதியில் அண்ணாச்சி வீட்டில் ஈடுபாடு குறைவாக உள்ளார் என்றும் அவரது காமெடி எதுவும் எடபடவில்லை என்றும் அபிஷேக் ராஜா பேசுவது ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளது.
போன சீசன் போல மாலை 6 மணிக்கு ஆரம்பித்து இரவு வரை 4 மணி நேரத்துக்கு லெந்தா போகாமல் விஜயதசமி ஸ்பெஷலையும் இரவு 10 மணி முதல் 11 மணிக்கு வைத்ததே நல்ல விஷயம் என பிக் பாஸ் ரசிகர்கள் பெரிய கும்பிடாக போட்டு கும்பிட்டு வருகின்றனர்.
பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?
சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ?
டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!