POLLING 📊 TN ELECTION 2026

 

நிர்வாண சித்தர் என்று பிரபலப்படுத்தப்பட்ட மனநலம் பாதித்த முதியவர் மீட்பு

3 years ago 03 டிசம்பர் 2022 12:14 PM | views : 204
10 ஆண்டுகளுக்கு முன் அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் பகுதிக்கு வந்த மனநலம் பாதித்த ஒருவர், யாராவது கொடுக்கும் உணவை சாப்பிட்டுக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையின் மீடியனில் அரளி செடி ஓரத்தில் படுத்து உறங்கிக்கொண்டு காலத்தை கழித்து வந்தார். திடீரென கடந்த சில மாதங்களுக்கு முன்னர், நாகம்பள்ளி பிரிவு சாலை ஓரத்தில் புறம்போக்கு நிலத்தில் ஒரு குடிசை போட்டு, முதியவரை அங்கு கொண்டுவந்து சிலர் விட்டுள்ளனர்.

அதன்பின்னர் உடல் முழுவதும் திருநீறு பூசப்பட்ட நிலையில் அந்த முதியவர் காணப்பட்டார். நிர்வாண சித்தர், தகர கொட்டாய் சித்தர், மலைக்கோவிலூர் சித்தர் என அவர் பற்றி தகவல் பரவ, பக்தர்கள் வருகை, உண்டியல் வசூல் என அந்த இடமே பரபரப்பானது.சில நாட்களுக்கு முன் இங்குவந்த சிலர், தலைகீழாக நடனம் ஆடி, பக்தி பாடல்கள் பாட, சித்தரை பற்றி அறியாமையில் இருந்துவிட்டோமே என இப்பகுதி மக்களையே நினைக்க வைத்துவிட்டனர்.

இந்நிலையில் மனநலம் பாதித்தவரை வைத்து சிலர் பண வசூலில் ஈடுபடுவதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு தன்னார்வலர்கள் புகாரை தட்டிவிட, மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர், வட்டாட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் தகர கொட்டகைக்கு விரைந்தனர். அங்கு உடல்நலம், மனநலம் பாதித்த நிலையில் இருந்த முதியவரை மீட்டு கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிய காவல்துறையினர், சித்தர் மோகத்தில் இருந்த பொதுமக்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். கரூரில் தகர கொட்டாய் சித்தராக மாற்றப்பட்டவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பதும், அரசுப்பேருந்தில் டிக்கெட் பரிசோதகராக இருந்த இவர் மனநல பாதிப்பில் வீட்டை விட்டு வெளியேறியதும் தெரிய வந்துள்ளது.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK AMMK தவெக ADMK ANNAMALAI MK STALIN டிடிவி தினகரன் TAMIL NADU TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி கனமழை உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் AIADMK மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் PMK பாமக தமிழகம் அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் கோவை கைது ரஜினிகாந்த் CONGRESS UDHAYANIDHI STALIN சட்டசபை தேர்தல் திருமாவளவன் இந்திய அணி INDIAN CRICKET TEAM கொலை சீமான் தமிழ்நாடு COIMBATORE வடகிழக்கு பருவமழை அமமுக பிரதமர் மோடி AJITH தென்காசி தீபாவளி KEERTHY SURESH நெல்லை ASSEMBLY ELECTIONS NELLAI PARLIAMENT ELECTION TAMIL ACTRESS TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் THIRUMAVALAVAN OPS EDAPPADI PALANISWAMI திருப்பரங்குன்றம் NORTHEAST MONSOON SEEMAN அஜித் PRIME MINISTER MODI CSK வன்னியர் MADURAI தமிழக சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் விடுமுறை கள்ளக்காதல் பாலியல் தொல்லை மதுரை தூத்துக்குடி ELECTION COMMISSION கீர்த்தி சுரேஷ்