INDIAN 7

Tamil News & polling

ஓபிஎஸ், இபிஎஸ்... இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்க அதிக வாய்ப்பு!

22 ஜனவரி 2023 04:13 AM | views : 716
Nature

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட தமாகா, இடைத்தேர்தலில் அதிமுகவே களம் காணும் என அறிவித்துவிட்டது. இதனை தொடரந்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இடைத் தேர்தலில் தங்கள் அணி போட்டியிடும் என அறிவித்துள்ளார் ஓபிஎஸ். பாஜகவை தங்கள் பக்கம் வைத்துக்கொள்ளும் முயற்சியாக, அக்கட்சி போட்டியிட விரும்பினால் ஆதரவு அளிக்கப்படும் என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்

ஒபிஎஸ்ஸின் இந்த அறிவிப்பால் இரட்டை இலை சின்னம் எந்த தரப்புக்கு சொந்தம் என்ற கேள்வி எழுந்துள்ளது. சின்னத்தை பொறுத்தவரை பெரும்பான்மை இருக்கும் பக்கத்துக்கு தான் ஒதுக்கப்படும் என்றும், எனவே எம்.எல்.ஏ-க்கள், எம்.பி.க்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களின் ஆதரவு அதிகமுள்ள எடப்பாடிக்கே கிடைக்கும் என திட்டவட்டமாக கூறுகிறது அத்தரப்பு. இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கிறதோ, அவருக்கே ஆதரவளிக்கப்படும் என கூட்டணி கட்சியினரும் தெரிவித்துள்ளனர்

இந்லையில், முறைகேடாக பொதுச் செயலாளர் ஆன எடப்பாடியின் பதவியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை என்பதால், எடப்பாடி தரப்புக்கு சின்னம் கிடைக்க வாய்ப்பே இல்லை. எனவே ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சின்னத்தை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்ப உள்ளதாக ஒபிஎஸ் தரப்பு கூறுகிறது. இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக குறிப்பிடும் அரசியல் நோக்கர்கள், இரு தரப்பினரும் வேறு சின்னத்தில் போட்டியிட்டால் தான் மக்கள் ஆதரவு யாருக்கு உள்ளது என்ற விவரம் வெளியாகும் என கூறுகின்றனர்.

சின்னம் முடக்கப்பட்டு சுயேச்சைகளாக இடைத்தேர்தலில் களம் கண்டால், இது ஓபிஎஸ் தரப்புக்கே பின்னடைவை ஏற்படுத்தும் என மூத்த பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.

ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் வரும் 24ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. தீர்ப்புக்கு பிறகு தான் அதிமுகவில் நிலவும் குழப்பங்களுக்கு தெளிவான விடை கிடைக்கும்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- முன்னாள் முதல்-அமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளருமான

Image சென்னை, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஜே.சி.டி.பிராபகர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்து வந்தார். இந்தநிலையில், சென்னையில் தவெக தலைவர் விஜயை சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் ஜே.சி.டி.பிரபாகர். 2011 சட்டமன்ற

Image சென்னை புரசைவாக்கத்தில் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி உள்ள அதிமுகவில் இணைவதில்லை என தீர்மானம் நிறைவேறப்பட்டது. தொண்டர்கள் மத்தியில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது,'

Image சென்னை, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்திருந்தார்.

Image சென்னை, தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பா.ஜனதா ஆயத்த வேலைகளை செய்து வருகிறது.



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்